(கங்கார்) இந்தியாவில் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நிகழ்வதை தொடர்ந்து மலேசியாவில் உள்ள தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்கள் (ஏடிஎம்) மூன்று நாட்களுக்கு மூடப்பட இருப்பதாக கூறப்படுவதை தொடர்பு பல்லூடக அமைச்சு நிராகரித்தது.சமூக ஊடகங்களில் நேற்று பரப்பப்பட்ட இந்தத் தகவல் ஒரு புரளி என புலன் விசாரணையில் தெரிய வந்ததாக துணையமைச்சர் டத்தோ ஜைலானி ஜொஹாரி கூறினார். பொது மக்களை பீதியடைய வேண்டாமென கேட்டுக் கொண்ட அவர், இம்மாதிரியான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர் உறுதி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினார்.பெர்லிஸ் ராஜா மூடா துவாங்கு சைட் பைஸடின் புத்ரா ஜமாலுல்லாயில் இங்கு தொடக்கி வைத்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதைத் தெரிவித்தார். இந்தியாவில் நிகழும் வானாகிரிப்டோர் 2.0 ரான்சம்வேர் சைபர் தாக்குதல் காரணமாக, மலேசியாவில் மூன்று நாட்களுக்கு ஏடிஎம் இயந் திரங்கள் மூடப் படவிருப்பதாக பரப்பப்பட்டு வரும் போலி தகவல் பற்றி ஜைலானி கருத்துரைத்தார். நாட்டில் இணையத்தள பயனீட் டாளர்கள் ரான்சம்வேர் தாக் குதலுக்கு ஆளானதாக இதுவரை தகவல் ஏதுமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்