img
img

கின்றாரா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகள்
வியாழன் 18 மே 2017 12:58:36

img

அண்மையில் சிலாங்கூர் மாநில ரீதியிலான அறிவியல் விழாவில் கின்றாரா தமிழ்ப்பள்ளி பங்கேற்று சாதனைப் படைத்தது. தி.கிஷன், மு.தேவகர், ச.தியானா, சிபவாண்யா, மு.கிஷாலினி, யோகேந்திரன், சுரேந்திரன் ஆகியோர் ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் சிறப்பாக தங்கள் திறனை வெளிப் படுத்தினர். 70 பள்ளிகளில் கின்றாரா தமிழ்ப்பள்ளி இரண்டாவது நிலையில் வெற்றி வாகை சூடியது. ஆசிரியர்கள் கோ.சிவசௌந்தரி, திருமதி சங்கரி போன்றோரின் அயராத உழைப்பு இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. ஐடெக்ஸ் எனப்படும் 21ஆவது அனைத்துலக புத்தாக்க கண்டு பிடிப்பு கண்காட்சியிலும் கின்றாரா தமிழ்ப்பள்ளியின் இளம் அறிவியலாளர் கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் ச.குமரவேலன், சா.தமிழ் அரசி, வி.ரிஷிகா, கோ.தினேஸ்வரன், ஸ்ரீ ராம் ரேஷ் ஆகியோர் இதில் பங்கெடுத்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். குறுக்கோட்ட போட்டியில் பெட்டாலிங் மாவட்டத்தைப் பிரதிநிதித்து மாநில அளவில் மாணவி ர.ஷர்ணித்தா மற்றும் பெட்டாலிங் பெர்டானா மாவட்ட ரீதியில் நடைபெற்ற நீளம் தாண்டும் போட்டியில் மாணவர் ர.சர்வின் மூன்றாவது நிலையில் வெற்றி வாகை சூடி பள்ளிக்கு நற்பெயரைத் தேடித் தந் தனர். சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கால்பந்துப் போட்டியில் கின்றாரா பள்ளி மாணவர்கள் இரண்டாவது நிலையில் வெற்றிப் பெற்றனர். இணைப்பாடம் மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனையையும் தனித்திறமையும் வெளிப்படுத்தும் கருவியாக உள்ளது என்று கின்றாரா தமிழ்ப்பள்ளியில் இணைப் பாட துணைத் தலைமையாசிரியர் திருமதி வ.சரஸ்வதி தெரிவித்தார். எங்கள் பள்ளி மாணவர்களின் சாதனைகள் எங்களின் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது என்று தலைமையாசிரியர் பொ.ராஜகுமாரன் குறிப்பிட்டார்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img