உயிரே போனாலும் என் மக்களுக்கு என் கையால் ஒரு பரிசுக்கூடை கூட எடுத்து வழங்க மாட்டேன் என்று ஜசெகவின் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் சூளுரைத்தார். பரிசுக்கூடை கொடுக்காததால் எனக்கு யாரும் வாக்களிக்கா விட்டாலும், அதனால் எனது சட்டமன்ற உறுப்பினர் பத வியை தக்க வைத்துக் கொள்ள இயலாத நிலை வந்தாலும் பரவாயில்லை. நான் பரிசுக்கூடை வழங்க மாட் டேன் என்று அவர் தெரிவித்தார். என் சமுதாயம் கையேந்தும் சமுதாயம் அல்ல. இந்நாட்டின் குடிமக்களாக அனைத்து உரிமைகளையும் தட்டிக் கேட்டு பெற்று கொடுக்கும் இடத்தில் நான் இருக்கிறேன் என்றார் அவர். காராக் நகரில் அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காமாட்சி தலைமையில் ரமேஷ் ராஜகோபால் ஏற்பாட்டில் அன்னையர் தினவிழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் காமாட்சி சிறப்புரை ஆற்றினார். பல சிரமங்களையும் சோதனைகளையும் கடந்து இந்த நிகழ்ச்சி இங்கு வெற்றிகரமாக நடப்பதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக் கும் காராக் வாழ் மக்கள் என்று பெருமிதத்துடன் அவர் கூறினார்.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆ.சு.மலையரசன் காப்புறுதியின் முக்கியத்துவத்தை பற்றி ஐந்து முக்கிய கருத்துக்களை முன் வைத்தார். டத்தின்ஸ்ரீ டாக்டர் வாணி பெண்களை தாக்கும் நோய்களை பற்றி விரிவான தகவல்களை வழங்கினார். டத்தோஸ்ரீ டாக்டர் பரணி கருணாகரன் பெண் களும் வியாபாரமும் என்ற தலைப்பில் மிகச் சிறந்த உரையை வழங்கினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்