பிரதமர் ஒதுக்கியுள்ள பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 50 தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளி நிர்மாணிப்பதற்கு திட்டம் வரையப்பட்டுள்ள சூழ்நிலையில் யாயாசான் ராக்யாட் சத்து மலேசியா அற நிறுவனத்தின் உதவியோடு ஏழு தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளி நிர்மாணிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள் ளன என்று பிரதமர் துறை தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட வரைவின் தலைவர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் கூறினார். நேற்று இங்குள்ள கிளே பாங் தமிழ்ப்பள்ளியில் புதிதாக பாலர் பள்ளி நிர்மாணிப்புக்களை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர் களிடம் இவ்வாறு கூறினார். 2020க்கும் அனைத்து பள்ளிகளிலும் கல்வி பெருந்திட்டத்தின் கீழ் பாலர் பள்ளிகள் அமைக்க வேண்டும் என்ற அர சாங்கத்தின் இலக்கு அடிப்படையில் சுமார் வெ.10 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 50 தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளி நிர்மாணிப்பதற்கு திட்டம் வரை யப்பட்டு வருகிறது என்று கூறினார். இதற்காக பிரதமர் துறை தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு திட்டமிடல் பிரிவு தமிழ்ப்பள்ளிகளை அடையாளம் கண்டு வரு கிறது என்று கூறினார். இதற்கிடையில் யாயாசான் ராக்யாட் சத்து மலேசியா அற நிறுவனம் மூலமாக பிரதமர் கொடுத்த நிதியைக் கொண்டு முதலில் 6 தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளி நிர்மாணிக்க திட்டமிட்டபோது அந்நிதியை மிச்சப்படுத்தி ஏழாவது பாலர் பள்ளியை நிர்மாணிக்க முடிவு எடுத்துள்ளோம் என்று அவர் கூறி னார். சிலாங்கூரில் சீ போர்ட் தமிழ்ப் பள்ளியில் முதல் பாலர் பள்ளி கட்டி முடிக்கப்பட்டு அது செயல்படத் தொடங்கியுள்ளது. மேலும் கெடா எண் ராட்டா, பினாங்கு சுப்ரமணி, பாரதி, கிளேபாங், ஜொகூர் செனவாங் ஆகிய தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளி நிர்மாணிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார். தலா வெ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் பாலர் பள்ளிகள் நிர்மாணிக்கப்படுகிறது. ஏழாவது பாலர் பள்ளி நெகிரி செம்பிலானில் கட்டப்படும் என்று கூறினார்.நாட்டில் செயல்படும் 524 தமிழ்ப் பள்ளிகளில் 200 பள்ளிகளில் பாலர் பள்ளிகள் செயல்படுகின்றன. மேலும் 57 தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் என்று கூறினார். குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்புப் பணிகள் விரைவில் தொடங்கப் படவிருக்கிறது. இத்திட்டம் நேரடியாக அரசாங்கத்தின் மேற்பார்வையில் தொடங்குவதால் இதன் குத்தகை வழங்குவது அரசு எடுக்கும் முடிவு என்று கூறினார்.டேசா பிஞ்சி, அரசினர் தமிழ்ப் பள்ளிகளின் இணை கட்டடம் கட்டி முடித்தும் திறக்கப்படாதது குறித்து வினவப்பட்டபோது இதற்கு விரைவில் தீர்வு பிறக்கும் என்று கூறினார். கிளேபாங் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி பத்மினி, பள்ளி வாரிய குழு தலைவர் கிருஷ்ணசாமி, பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் பாலர் பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்