தடுப்புக் காவல் கைதி எஸ்.பாலமுருகனின் மரணம் ஒரு விபத்தல்ல. உடல் முழுவதும் ஏற்பட்ட பலமான வலி அதிர்ச்சியால் அவர் மாண்டிருக்கிறார் என்றும் அவர் கடினமாக குத்தப்பட்டிருக்கலாம் அல்லது உதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நோயியல் நிபுணர்கள் இருவர் நேற்று தெரிவித்தனர். பாலமுருகனின் மரணம் மீதிலான இ.ஏ.ஐ.சி-யின் பொது விசாரணையில் அவர்கள் இத்தகவலை வெளியிட்டனர்.பாலமுருகனுக்கு ஏற்கெனவே இருதய கோளாறு இருந்தது. அடி உதைகளால் அவருக்கு ஏற்பட்ட வலி அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் கார்த்தினி முகமட் அரிப் கூறினார். பிப்ரவரி 8-ஆம் தேதி கிள்ளான் மருத்துவமனையில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற முதலாவது சவப்பரிசோதனையில் டாக்டர் கார்த்தினி சம்பந்தப்பட்டுள்ளார்.பாலமுருகனின் உடலில் தென்பட்ட அடையாளங்கள் அவர் கடுமையாக தாக்கப்பட்டதை காட்டினாலும், அவரின் எலும்புகளை உடைக்கும் அளவிற்கு மோசமாக இல்லை என்று இரண்டாவது சவப்பரிசோதனையை நடத்திய தடயவியல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சியூ ஷு ஃபெங் கூறினார். நேற்று மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்றது. கிள்ளான், ஜாலான் பத்து பெலாவில் பாலமுருகன் கைது செய்யப்பட்டு பண்டார் பாரு கிள்ளான் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட பிப்ரவரி 6-ஆம் தேதி சம்பவம் பற்றி இதுவரை பாலமுருகனின் குடும்பத்தாரும், போலீஸ் அதிகாரி களும் சாட்சியமளித்துள்ளனர். பாலமுருகனின் இடது கண், வலது புற மார்பு, முதுகு ஆகிய பகுதிகளில் காயங்கள் காணப்பட்டதாக டாக்டர் கார்த்தினி கூறினார். அது மட்டுமின்றி, இடது கால் தொடை, வலது கால், வலது கால் முட்டி, வலது கை மணிக்கட்டு, இடது கை மணிக்கட்டு, முதுகு மேல் பகுதி, இடது கால் தொடங்கி பாதம் வரை காயங்கள் காணப்பட்டதாக டாக்டர் கார்த்தினி தெரிவித்தார். திசுக்கள் கிழியும் அளவிற்கு கடுமையான பலம் கொண்டு அந்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த காயங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் அல்லது ஒரே நேரத்தில் நிகழ்ந்துள்ளன. குத்து அல்லது உதைத்ததன் காரணமாக அக்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். எல்லாமே சாத்தியம் என்று அவர் சொன்னார். கிள்ளான் உத்தாரா போலீஸ் நிலையத்தில் மரணமடைந்த பாலமுருகனின் சவப்பரிசோதனை நிழற்படங்களை அவர் விசாரணையின் போது பார்வைக்கு வைத்தார். கால் முட்டிகளிலும், காதுகளிலும் கூட காயங்கள் காணப்பட்டன. இது கீழே விழுந்ததால் ஏற்பட்டிருக்க சாத்தியமுள்ளது. மற்றவை பலம் கொண்டு தாக் கியதால் ஏற்பட்ட காயங்களாகும். எனினும், ஒரு சாதாரண மனிதருக்கு மரணம் சம்பவிக்கும் அளவிற்கு அந்த காயங்கள் கடுமையானவை அல்ல என்றார் அவர். பாலமுருகனின் இருதயம் இருந்த நிலை மரணத்தை துரிதப்படுத்தியிருக்க முடியுமா என்று இ.ஏ.ஐ.சி. தலைவர் யாக்கூப் முகமட் செம் வினவிய போது, இதற்கு முன்பு பாலமுருகனுக்கு இருதயக் கோளாறு இருந்ததை டாக்டர் கார்த்தினி சுட்டிக்காட்டினார். கல்லீரல் கோளாறு காரணமாக பாலமுருகனுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்ததை அவரின் கண் மஞ்சள் நிறத்தில் இருந்ததை வைத்து உறுதி செய்ய முடிந்தது. வழக்கமாக ஒரு மனிதரின் கல்லீரல் எடை ஒரு கிலோ கிராமிற்கும் மேல் இருக்கும். ஆனால், பாலமுருகனின் கல்லீரல் சுருங்கி, 990கிராம் எடையைக் கொண்டிருந்ததாகவும் அவர் சொன்னார். அவருக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர். எனினும், எவ்வளவு காலம் அவர் இந்நோயினால் அவதி யுற்றார் என்பதை அவரால் உறுதி செய்ய இயலவில்லை. விசாரணை இன்று முடிவடைகிறது. இரண்டாம் கட்ட விசாரணை ஜூன் மாதம் நடைபெறும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்