பிரிம் உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மே 31 வரை கால அவகாசம் இருப்பதாக நிதியமைச்சு கூறிற்று. மலேசிய நிறுவனங்கள் ஆணை யத்தின் (எஸ்எஸ்எம்) கீழ் நிறுவனங்களைப் பதிவு செய்திருக்கும் பிரிம் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய விண்ணப் பங்களுடன் அத்தியாவசிய ஆவ ணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சு ஓர் அறிக்கையில் நினைவுறுத்தியது. நிறுவனங்களை பதிவு செய்திருக்கும் விண்ணப்ப தாரர்கள் தங்களுடைய பிரிம் தொகைக்கான விண்ணப்பங் களுடன் சம்பள அறிக்கை, வங்கிக் கணக்கு அறிக்கை (நிறுவனம் அல்லது தனி நபர் உட்பட) அத்தியாவசிய ஆவணங்களை சமர்ப்பிக்காத போதிலும், 2017ஆம் ஆண்டிற்கான முதல்கட்ட பிரிம் தொகையை வழங்க அமைச்சு முன்பு ஒப்புக் கொண்டிருந்தது. எனினும் அடுத்தக் கட்ட தொகை வழங்கப்படுவதற்கு முன்னர், மேல் முறையீட்டு காலத்தின்போது உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை விண்ணப்பத்தாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அத்தியாவசிய ஆவணங்களை வழங்கியவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதை அமைச்சு கண்டுப்பிடித்திருக் கிறது என்று அந்த அறிக்கை கூறிற்று. அமைச்சு இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மேல் முறையீட்டு விண்ணப்பங் களை பெற்றிருக்கிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்