பெஸ்தாரி ஜெயா சுங்கை ரம்பை தமிழ்ப்பள்ளிக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட அந்த நிலத்தில் எவ்விதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாதது குறித்து பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். புதிய பள்ளிக்கான நிர்மாணிப்புப் பணிகள் இன்னும் தொடங் கப்படாமல் இருப்பதற்கு சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியம் பதில் சொல்ல முடியுமா என்றும் அவர்கள் வினவுகின்றனர். சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி, பிரதான சாலையிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உட்புறத்தில் அமைந்துள்ளது. அப்பள்ளியை பிர தான சாலைப் பகுதிக்கு கொண்டு வருவதற்கு பள்ளியின் மேலாளர் வாரியம் எடுத்துக் கண்ட முயற்சியின் காரணமாக சிலாங்கூர் மாநில அரசு இரண்டு ஏக்கர் நிலத்தை இரண்டாண்டுகளுக்கு முன்பு வழங்கியது. அந்த இரண்டு ஏக்கர் நிலத்தை சீர்படுத்தி பள்ளமாக கிடந்த நிலத்தில் செம்மண் நிரப்பி அறிவிப்புப் பலகையை வைத்து ஈராண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், புதிய பள்ளியைக் கட்டுவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. இதனால், அதிருப்தியடைந்துள்ள பெற்றோர் பள்ளி வாரியத்திடம் இது பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். புதிய இடத்தில், புதிய பள்ளிக்கூடத்தை நிர்மாணிப்பதற்கான செலவுகளை கல்வி அமைச்சின் வழி மத்திய அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருப்பதாக பள்ளி மேலாளர் வாரியம் இரண்டாண்டுகளுக்கு முன்னமே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தகக்து.ஆகவே, எந்த நிர்மாணிப்புப் பணிகளையும் மேற்கொள்ளாது வெறும் அறிவிப்புப் பலகை மட்டும் அங்கு போடப்பட்டிருப்பதால் புதிய பள்ளி கட்டப்படுமா? என்று கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. பள்ளி கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது, மாநில அரசா, மத்திய அரசா என்று கேள்வியை எழுப்பியுள்ள பெற்றோர், பள்ளி மேலாளர் வாரியம் சரியான விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்