உள்நாட்டில் சீனி விலையை கிலோ கிராமிற்கு 40 காசு உயர்த்த எம் எஸ் எம் மலேசியா ஹோல் டிங்ஸ் பெர்ஹாட் அரசாங்கத்துடன் இன்னும் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. நிறுவனத்தின் லாபத்தை உறுதிப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கச்சா சீனி விலையில் ஏற்பட்டிருக்கும் கணிக்க முடியாத ஏற்ற இறக்கம், அதேவேளையில் ரிங்கிட்டின் செயல்பாடு ஆகியவை இவ்வாண்டை ஒரு சவால்மிக்கதாக மாற்றி இருப்பதாக பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எப்ஜிவி) குழுமத்தின் தலைவரும் தலைமை செயல் முறை அதிகாரியுமான டத்தோ ஸக்காரியா அர்ஷாட் கூறினார். சீனி விலையில் ஏற்பட்டு வரும் கணிக்க முடியாத ஏற்ற இறக்கம் காரணமாக, அரசாங்கம் சீனியின் விற்பனை விலையை கிலோவிற்கு 40 காசு உயர்த்த வேண்டும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற எம் எஸ் எம் மலேசியாவின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். அரசாங்கம் 2017 மார்ச் முதல் தேதி கிலோவிற்கு 11 காசு உயர்த்தி வெ.2.95 ஆக நிர்ணயித்தது. இதற்கு முன்னர் எம் எஸ் எம் 40 காசு உயர்வை கோரி இருந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்