கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகாவிற்கு உரியது என்றும் 14ஆவது பொதுத் தேர்தலின்போது அந்தத் தொகுதியில் கட்சி போட்டியிடும் என் றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று திட்டவட்டமாக கூறினார். அந்தத் தொகுதியில் போட்டியிடும் தனது எண்ணத்தை மைபிபிபி தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் சுட்டிக்காட்டி இருப்பதற்கு பதிலளிக்கும் வகையில் டாக்டர் சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார். மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி யின் நடப்பு உறுப்பினராவார். பொதுத் தேர்தலுக்கு முன்னர் இம்மாதிரியான கோரிக்கைகள் எழுவது இயல்பு என்று சுகாதார அமைச்சருமான சுப்பிரமணியம் குறிப்பிட்டார். மஇகாவும் மைபிபிபியும் தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளாகும். கேமரன் மலை தொகுதி ஆளுங்கட்சிக்கு ஒரு பாதுகாப்பான தொகுதி என பலராலும் கருதப் படுகிறது. பொதுத் தேர்தலில் கேமரன் மலை உட்பட ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் 13 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற கட்சி இலக்காக கொண் டிருப்பதாக டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார். கட்சி ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். தென் கிழக்காசிய பொது சுகாதார ஊட்டச்சத்து உணவு மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர் களிடம் இதை தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்