பெட்டாலிங் ஜெயா சிங்கப்பூரில் குழந்தைகளுக்கான பால் மாவின் விலைகள் அளவுக்கதிகமாக ஏற்றம் கண்டிருப்பதை தொடர்ந்து, அங்குள்ள அதிகமான பெற்றோர் பால் மாவு வாங்குவதற்காக ஜொகூர் வரத் தொடங்கியுள்ளனர். சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளுக்கான ஒரு டின் பால் மாவின் விலை 120 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது. உலகிலேயே மிக விலை யுயர்ந்த பொருள்களில் ஒன்றாக இது தற்போது விளங்குகிறது. ஹாங்காங் விலையை விட இது அதிகமாகும் என்று தென் சீன மோர்னிங் போஸ்ட் கூறுகிறது. உதாரணத்திற்கு, 900 கிராம் எடைக்கொண்ட சிமிலெக் (ஸ்டேஜ் 1) பால் மாவின் விலை சிங்கப்பூரில் 184 வெள்ளியாக விற்கப்படுகிறது. ஹாங்காங்கில் இதன் விலை 166 வெள்ளியாகும். மலேசியாவில் அதே முத்திரைக் கொண்ட பால் மாவின் விலை வெ.112.90 ஆகும். மலேசிய ரிங்கிட்டிற்கும் சிங்கப் பூர் டாலருக்கும் இடையே பரிவர்த்தனை விகிதம் தனக்கு சாதகமாக இருப்பதால் ஜொகூரில் பால் மாவு வாங்குவது தனக்கு வசதியாக இருக்கிறது என்று 1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட மூன்று பிள்ளைகளுக்கு தாயான 34 வயது மாது கூறுகிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்