பண்டார் கின்றாராவில் நிகழ்ந்த கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவங்களின் பின்னணியில் உள்ள சந்தேகப்பேர்வழிகளை தாங்கள் அடையாளம் கண்டு விட்டதாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையாளர் மெகாட் முகமட் அமினுடின் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த அந்த வளாகத்தின் உரிமையாளர் அது குறித்து கடந்த சனிக்கிழமை மாலை 4.23 மணியளவில் போலீசில்புகார் செய்துள்ளார் என்று மெகாட் குறிப்பிட்டார். தனக்கு சொந்தமான வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் தனது புகாரில் உறுதிப்படுத்தியுள்ளார். கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவம் குறித்து ரகசிய கேமராவில் பதிவான அந்த 4 நிமிட காட்சி, கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கில் ஒரு சூதாட்ட மையத்திற்குள் நுழைந்த இரு நபர்கள் கொள்ளையடித்தது போதாது என்று கருதி, அங்கிருந்த பெண் கேஷியரையும் கற்பழித்துள்ளனர். அந்த கொள்ளை மற்றும் கற்பழிப்பு காட்சி அங்கு இருந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது பரவலாக சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டு வருகின்றன. அந்த இரு சந்தேகப்பேர்வழிகளின் முகம் ரகசிய கேமராவில் மிகத் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த இரு நபர்கள் குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதையும் மெகாட் உறுதிபடுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்