கிந்தா உத்தாரா தமிழ், சீன ஆரம் பப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான தேசிய மொழி பேச்சு போட்டியின் கதை சொல்லும் பிரிவில் கிளேபாங் தமிழ்ப் பள்ளி மாணவி துர்காஷினி ஜெகதீசன் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார். நேற்று பொய்லாம் சீனப்பள்ளியில் இப்போட்டி நடைபெற்றது. கிந்தா உத் தாராவைச் சேர்ந்த தமிழ், சீன ஆரம்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். தேசிய மொழியில் தங்களின் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் மாவட்ட ரீதியாக இப்போட்டியை நடத்தி பிறகு மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது என்று நிகழ்வு ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பு தலைவி திருமதி கமலா தேவி பொன்னுசாமி கூறினார். பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மா ஹான் சூன் பிரதிநிதியாக அவரது செயலாளர் சோங் செங் ஹேங் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மொத்தம் 21 மாணவர்கள் தேசிய மொழி தனி நபர் கதை சொல்லும் போட்டியில் பங்கேற்றினர் இவர்களில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி 3 ஆம் ஆண்டு மாணவி துர்காஷினி ஜெகதீசன் முதல் பரிசு பெற்றார். மகளின் சாதனையை பெற்றோர்கள் பாராட்டினார்கள்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்