சட்டவிரோத அந்நிய மாற்று நாணய வர்த்தகத்தில் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துவிட்டு, அவற்றை ஒட்டு மொத்தமாக இழந்து விட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பரிதவித்து வருவது அம்பலமாகியுள்ளது. போலீசில் புகார் செய்ய முடியாமலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியா மலும் பண வரவுக்குப் பதிலாக வேதனை கண்ணீரே மிஞ்சியிருக்கும் நிலைக்கு இந்தியர்கள் பலர் தள்ளப்பட்டுள்ளனர். அதில் பலர் தற்கொலை முயற்சிக்குக்கூட சென்றுள்ளனர். பலர் வட்டிக்கு பணத்தை வாங்கி, அதனை திருப்பி செலுத்த முடியாமல் தலைமறைவாகி யுள்ளனர். இது போன்ற சட்டவிரோத அந்நிய நாணய மாற்று வர்த்தகத்தில் ஈடுபடாதீர்கள் என்று போலீஸ் துறையும் பல முறை எச்சரித்தும், அவர்களின் நினைவுறுத்தலையும் மீறி செய்த காரியத்தினால் தங்கள் சொந்த சேமிப்பு மற்றும் கடன் பெற்ற பணத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர் என்று மலேசிய நண்பன் கண்டறிந்துள்ளது. பலர் 5 ஆயிரம் வெள்ளி முதல் இரண்டு லட்சம் வெள்ளி வரையில் இழந்துள்ளதாக மலேசிய நண்பனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்நிய மாற்று நாணய வர்த்தகத் திட்டத்தில் பணத்தை போட்டால் மாதம் தோறும் அந்த மொத்த தொகையிலிருந்து 10 விழுக்காடு பணம் கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு லட்சம் வெள்ளி அந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 15 மாதத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி பெற முடியும் என்று ஆசை வார்த்தைகளை கூறி தரகர்கள் அந்த சட்டவிரோதத் திட்டத்தில் இந்தியர்களைச் சேர்த்துள்ளனர். முதல் மூன்று மாதத்திற்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே அந்த 10 விழுக்காட்டு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கொடுக்கும் நிறுவனங்கள் மற்றும் இடை தரகர்கள் பின்னர் நான்காவது மாதத்தில் நிறுவனம் நொடித்து விட்டது என்று காரணம் சொல்லி அதன் பொறுப்பாளர்கள் தலைமறைவாகி விடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த நிறுவனங்களுக்கு பணத்தை முதலீடு செய்யும்படி ஆள்பிடித்துக்கொடுப்பவர்கள் இந்தியர்களாகவே இருக் கின்றனர் என்பதுதான் இங்கு சோகம். சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது வங்கிகள் நியூசிலாந்து மற்றும் இன்னும் சில வெளிநாடுகளில் இருப்பதாக கூறு கின்றனர். பூச்சோங்கைச் சேர்ந்த தனித்து வாழும் பெண் ஒருவர் 60 ஆயிரம் வெள்ளியை இந்த முதலீட்டில் கொடுத்துவிட்டு பரிதவித்து வருகிறார். இந்த பணத்தை பெறுவதற்கு அவர் வங்கி ஒன்றில் தனி நபருக்கான கடனை பெற்றுள்ளார். இப்போது அந்தப் பணம் பறிபோன பின்னர் தாம் ஏமாந்து போனததை குடும்பத்தில் உள்ள சகோதர்களிடம்கூட சொல்ல முடியாமல் சம்பளப் பணத்தை வங்கி கடனுக்கு மட்டுமே செலுத்தி தன்னை வருத் திக்கெண்டு வருகிறார். கோலாலம்பூரைச் சேர்ந்த ஒருவர் தனது இ.பி.எப். பணமான 2 லட்சம் வெள்ளியை இழந்துள்ளார். பினாங்கில் ஒரு லட்சம் வெள்ளி வரையில் முதலீடு செய்த ஓர் இந்தியர் அந்தப் பணம் திருப்பிக் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் தற்கொலை செய் வதற்குக்கூட துணிந்து விட்டார். தனது மகனின் மருத்துவப் படிப்பிற்காக சிறுக சிறுக சேமித்து வைத்த அந்தப்பணம் பறிபோய்விட்டதை எண்ணி தற்போது ஒரு மனநோயாளியைப் போல் இருந்து வருகிறார். 1997 ஆம் ஆண்டு நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய போது, சட்டப்பூர்வ நிலையில் இருந்த இந்த வர்த்தகத்தை அரசாங்கம் தடை செய்துவிட்டது. ஆனால் சிலர் வெளிநாட்டு வங்கிகளின் பெயரைச் சொல்லி தனிநபர்கள் பொது மக்களிடம் இந்த சட்டவிரோத நாணய மாற்று வர்த் தகத்தில் முதலீடு செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஒரு சட்டவிரோத நடவடிக்கை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது தனிநபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடியாமல் நெருப்பில் போட்ட புழுவாகத் துடித்து வருகின்றனர். பங்கு சந்தையில் இடம் பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே மூலத் தொழில் உட்பட பிற வர்த்தகங்கள் தொடர்பாக பேங்க் நெகாரா லைசென்ஸ் வழங்கி யுள்ளது. ஆனால் இது போன்ற சட்டவிரோத அந்நிய நாணய மாற்று வியாபாரத்திற்கு பேங்க் நெகாரா அனுமதி அளித்தது கிடையாது. குறுகிய காலத் திலேயே நிறைய பணத்தைப் பார்க்க வேண்டும் என்ற பேராசையில் விளைந்த விளைவுதான் தற்போது தாங்கள் பணத்தை இழந்ததற்கு காரணம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்