சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாஹிர் நாயக் இந்தியாவில் பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர மலேசியாவில் அடைக்கலம் பெறக்கூடாது என்று மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தின் (யு.கே.எம்) ஆய்வாளர் ஃபைசால் மூசா கூறுகிறார். தான் ஒரு தைரியசாலி என்பதை ஸாஹிர் காட்ட வேண்டும். பிரச்சினையை அவர் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும் என்று ஃபைசால் குறிப்பிட்டார். பண மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இந்திய அரசாங்கம் அவரைத் தேடி வருகிறது. வங்காள தேசத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அவரின் உரை யைக் கேட்ட பிறகு டாக்காவில் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றனர் என்பதற்கான ஆதாரங்களை கண்டுப்பிடித்த பிறகு வங் காளதேச அதிகாரிகளும் அவரை பற்றி விசாரித்துக்கொண்டு வருகின்றனர். கடந்த 2016 ஜூலை மாதம் 29 பேரின் மரணத்திற்கு காரணமான தற்கொலை தாக்குதல் சம்பவம் குறித்து அவர் பேசினார். கடந்த சனிக்கிழமை அரச சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற சமயம் என்ற பெயரில் வன்செயலும் அடக்கு முறையும் என்பது மீதிலான ஆய்வரங்கத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். ஸாஹிருக்கு மலேசிய அரசாங்கம் நிரந்தர பிரஜை அந்தஸ்து வழங்கியிருப்பதானது, கேள்விக்கிடமான பின்னணியைக் கொண்டவர்களை பாதுகாக்கும் போக்கை மலேசியா கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது என்று அக்கல்விமான் மேலும் கூறினார். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வரலாற்றை நாம் கொண்டுள்ளோம். 1990-ஆம் ஆண்டுகளில் இந்தோனேசியா, மினாங்காபாவில் பத்ரி போரில் ஈடுபட்ட ஒரு சமய போதகருக்கு நாம் அடைக்கலம் கொடுத்திருக்கிறோம். சிரம்பானில் தங்க அனுமதிக்கப்பட்ட அவர் பிறகு அங்கேயே மரண மடைந்தார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்