போர்ட்டிக்சன் செயிண்ட் லியோ னார்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நேற்று முன் தினம் நிகழ்ந்த தீ விபத்திற்கு அங்கு பணியாற்றுபவர்களிடையே ஏற்பட்ட பொறாமை ஒரு காரண மாக இருக்கலாம் என்பதன் அடிப்படையில் போலீசார் இருவரை கைது செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின் றனர். அதே சமயம், அந்நிய நாட்டவர் பள்ளியின் வேலியை வெட்டி, அதன் வழியாக பள்ளி வளாகத்திற்குள் நுழைவது ரகசிய கேமரா வழி அடையாளம் காணப்பட்டிருப்பதாக அறி யப்படுகிறது.போர்ட்டிக்சன், ஜாலான் பந்தாய் 2-ஆவது மைலில் அமைந்திருக்கும் செயிண்ட் லியோனார்ட்ஸ் தமிழ்ப் பள்ளியில் நிகழ்ந்த அத்தீ விபத்தில் பள்ளிக்கூட தளவாடங்கள் எரிந்து நாசமாகின. தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் பள்ளியின் மற்ற வகுப்பறைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். சம்பவத்தின் போது இரு பாதுகாவலர்கள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.போலீசார் மோப்ப நாய்களை வரவழைத்து தடவியல் சோதனையை நடத்தியதுடன், வேலியை வெட்டி, உள்ளே புகுந்த அந்நிய நாட்டவரை அடையாளம் கண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மொத்தம் 56 மாணவர்கள் பயிலும் செயிண்ட் லியோனார்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி தீ விபத்து தொடர்பாக அதன் தலைமை ஆசிரியர் போலீசில் புகார் செய்துள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்