சுங்கை பாக்காப், பிறவிலேயே காலில் ஊனம் ஏற்பட்டு மனதளவில் நம்பிக்கையுடன் இருந்து வரும் தங்கள் மகன் விவியன் த/பெ எஸ்.மேத்தியூஸ் என்பவருக்கு ஏதா வது வேலை கிடைக்குமா என்ற எதிர் பார்ப்போடு இந்தியப் பெற்றோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். நல்ல திறனும், கல்வியறிவும் கொண்டுள்ள தமது மகனுக்கு ஏதாவதுஓர் வேலை கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அரசாங்கத்துறையிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலைத் தேடி அலைந் துக் கொண்டிருப்பதாக தென் செபராங் பிறை, வால்டோர் தோட்டத்தைச் சேர்ந்த தந்தை எஸ்.மேத்தியூஸ் தெரிவித்தார். இவரைப் போன்றவர்கள் எந்நிலையிலும் ஒதுக்கப்படாமல் சமுதாயத்திற்கு இவர்களின் பங்களிப்பும் தேவையெனக் கருதி அரசாங்கமும் இவர்களுக் கென பல பயிற்சிகளும் வழங்கி வேலை வாய்ப்பையும் வழங்கி வருகின்றது. இதே போன்று தனியார் நிறுவனங்களும் உடல் குறை உடையோருக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவது வரவேற்கக் கூடியது என்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவருக்கென தாம் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்தது என ஒரு பேருந்து ஓட்டுநரான எஸ். மேத்தியூஸ் வேதனையுடன் குறிப்பிட்டார். இளைஞர் விவியன் மேத்தியூஸின் நிலையில் நல்லுள்ளம் கொண்டு அரசாங்கமோ அல்லது தனியார் நிறு வனங்களோ அவருக்கு வேலை வாய்ப்பை வழங்க முன் வர வேண்டுமென விவியனின் தந்தை உருக்கமுடன் கேட்டுக் கொண்டுள்ளனர். தொடர்புக்கு எஸ்.மேத்தியூஸ் 014-3446192.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்