(தைப்பிங்) போதைப்பொருளை விநியோகித்த குற்றத்திற்காக இரு நண்பர்களுக்கு தைப்பிங் உயர் நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மூன் றாண்டுகளுக்கு முன் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் 2.93 கிலோ கிராம் எடைக் கொண்ட கஞ்சா வகை போதைப் பொருளை விநியோகித்த குற்றத் திற்காக வி. நடராஜன் (30), ஆர். விக்னேஸ் வரன் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்விருவர் மீதாக வழக்கு விசாரணை நீண்ட காலமாக தைப்பிங் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வேளையில் நீதிபதி முகமட் ஜைய்னி மஸ்லான் தலைமையில் இவ்வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. இவ்விரு நண்பர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க தவறினர். இதனால் 1952 அபாயகர போதைப் பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவ்விரு நண்பர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு எழுதினார். நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது அவ்விரு நண்பர்களும் மிகவும் அமைதியாக காணப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்