கோலாலம்பூர், மே 13- அனைத்துலக ஐடேக்ஸ் (Itex) கண்காட்சியில் இடம் பெற்ற போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து உள்ளனர். ஐடேக்ஸ் எனப்படும் 28 ஆவது அனைத்துலக புத்தாக்க, கண்டுபிடிப்பு கண்காட்சி மே 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கேஎல்சிசி கொண் வேன்ஷன் மண்டபத்தில் நடைபெற்றது. உலகின் இளம் ஆய்வாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் மிகப் பெரிய கண்காட்சியாக ஐ தேக்ஸ் விளங்குகிறது. இவ்வாண்டும் மொத்தம் 20 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர். ஆசியாவின் மிகச் சிறந்த இளம் கண்டு பிடிப்பாளர்கள், மலேசியாவின் சிறந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள் என இரு பிரிவுகளில் இப்போட்டி நடத்தப் பட்டது. இக்கண்காட்சியில் இளம் ஆய்வாளர்கள் தங்களின் படைப்புகளை வெளிப்படுத்த வேண்டும். இதில் சிறந்த படைப்புகளுக்கு ஆசிய, மலேசிய ரீதியில் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் ஜொகூர் பாரு யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி, பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி, பந்திங் ஜெஞ்ஜாரோம் தமிழ்ப்பள்ளி, பினாங்கு ராம கிருஷ்ணா தமிழ்ப்பள்ளி, காஜாங் தமிழ்ப்பள்ளி உட்பட 50க்கும் மேற்பட்ட மலாய், சீனப் பள்ளிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டு தங்களின் படைப்புகளை வெளிப்படுத்தினர். இதில் காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களின் சிறப்பான படைப்புகளின் மூலம் 6 தங்கப்பதக்கங்களும் 2 வெள்ளிப் பதக்கங்களும் 3 வெங்கலப் பதக் கங்களும் ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கப் பதக்கங்களும் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 1 தங்க பதக்கமும் 1 வெள் ளிப்பதக்கமும் 2 வெண்கலப்பதக்கங்களும் ஜெஞ்ஜாரோம் தமிழ்ப்பள்ளி 1 தங்கப் பதக்கம் பூச்சோங் கின்றாரா 1 தங்கப் பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். இதனிடையே அனைத்துலக ஐடேக்ஸ் கண்காட்சியில் பதக்கங்களைப் பெற்றுத் தந்த மாணவர்களை காஜாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஜோன் போஸ்கோ வெகுவாக பாராட்டினார். அதே வேளையில் காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைக்க உறுதுணை யாக இருந்த ஆசிரியை தங் கேஸ் அண்ணாமலை பெற்றோர்களுக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்