(சிப்பாங்) சைபர் ஜெயாவில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட சிப்பாங் மாவட்டப் போலீஸ் குழுவினர் இரண்டு பல்கலைக் கழக மாணவர்களிடமிருந்து போதைப் பொருளை பறிமுதல் செய்ததோடு அவர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நேற்று இங்குள்ள பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள சிப்பாங் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிப்பாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி அப்துல் அஸிஸ் பின் அலி விளக்கமளித்தார். இம்மாதம் 3ஆம் தேதியன்று இச்சம்பவம் தொடர்பில் புகாரைப் பெற்ற சிப்பாங் மாவட்டப் போலீஸ் இலாகாவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இங்கு சைபர் ஜெயா பகுதியில் உள்ள ஒரு வீட்டை முற்றுகை யிட்டபோது அங்கிருந்த இரு ஆடவர்களை கைது செய் ததுடன் அவர்களிடமிருந்து வெ. 1200 மதிப்புடைய 469 கிராம் கஞ்சா வகை போதைப் பொருளை கைப்பற்றியதாகக் கூறினார். இங்கு சைபர் ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றுவரும் 34 மற்றும் 35 வயதுடைய அவ்விருவரும் சகோதரர்கள் என துவக்கக்கட்ட விசாரணை யில் தெரிய வந்துள்ளதுடன் அயல் நாட்டைச் சேர்ந்த அவ்லி இருவரும் 2011 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கி வருவதோடு இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏ.சி.பி அப்துல் அஸிஸ் பின் அலி தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்