இந்து சமயத்தை இழிவுப் படுத்திய பெர்லிஸ் முஃப்திக்கு எதிராக போலீஸ் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண் டும் என்று 10க்கும் மேற்பட்ட அரசு சாரா இயக்கங்கள் நேற்று வலியுறுத்தின. இந்து சமயத்தையும், இந்து வழிபாட்டு உருவங்களையும் சிறுமைப்படுத்தி பெர்லிஸ் முஃப்தி முகமட் அஸ்ரி பகிரங்க மான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த முஃப்தியின் வீடியோ பதிவுகள் அனைத்தும் யூடியூப் உட்பட அனைத்து சமூக ஊடகங் களிலும் வைரலாக பரவி வருகின்றன. இந்த வீடியோவை கண்டித்து பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் வேளையில், பலர் ஆதரித்தும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.இதனால் நாட்டு மக்களி டையே குழப்பங்கள் தான் ஏற்படுகிறது என்று பூச்சோங் முரளி செய்தியாளர்களிடம் கூறினார். நாங்கள் வணங்கும் தெய்வங் களைப் பற்றி அவதூறாக பேசுப வரை எந்தவொரு மனிதனாலும் சகித்துக் கொள்ள முடியாது.இதன் அடிப்படையில் பெர் லிஸ் முஃப்திக்கு எதிராக பலர் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். அப்படி குரல் எழுப்புவர்கள் மீது போலீஸ் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் தவறு செய்த பெர்லிஸ் முஃப்திக்கு எதிரான போலீஸ்படையும், அரசாங்கமும் இதுநாள் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் எங்களின் மன குமுறல்களுக்கு காரணமாகும்.இனியும் இப்பிரச்சினையை வளர விடக் கூடாது எனும் நோக்கில் தான் பெர்லிஸ் முஃப்தி மீது நாடு தழுவிய நிலையில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன. 10க்கும் மேற்பட்ட அரசு சாரா இயக்கத் தலைவர் நேற்று செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார்களை பதிவு செய்தனர்.என்னுடன் இணைந்து விஜயன், சாமி கரூணா மூர்த்தி, விஜய் கண்ணன், இளங்கோவன், பிடி கானா, பிகேஆர் சாமி ஆகி யோரும் புகார்களை பதிவு செய்தனர். ஆகவே பெர்லிஸ் முஃப்தி மீது போலீஸ்படை உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பூச்சோங் முரளி கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்