img
img

வாராந்திர அடிப்படையில் விலை நிர்ணயம்.
வெள்ளி 12 மே 2017 13:05:08

img

பெட்டாலிங்ஜெயா, மே 12- வாராந்திர அடிப்படையில் எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும் நடைமுறை, நாடு முழுவதும் சில்லறை விற்பனையாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடும் என மலேசிய பெட்ரோல் வர்த்தகர்கள் சக்கத்தின் (பிடிஏஎம்) தலை வர் கைருல் அனுவார் கூறுகிறார். தங்களுடைய பெட்ரோல் வர்த்தகத்தில் மாதந்தோறும் ஏற்படும் செலவுகளைக் குறைக்க இந்த விற்பனையாளர்கள் எடுக்க வேண்டிய கடுமையான ஆனால் தேவையான நடவடிக்கை இதுவாகும் என்று அவர் தெரிவித்தார். செலவு ஒரு பிரச்சினையாக தொடர்ந்தால், முழு சுய சேவையை நாங்கள் அமல்படுத்த நேரிடும். இதனால் 14,000 பேர் வேலை இழப்பர் என கைருல் கூறியதாக அந்த நாளிதழ் தெரிவித் தது. நாடு தழுவிய நிலையில் 3,500 பெட்ரோல் நிலை யங்கள் உள்ளன. இவற்றில் 50,000 பேர் வேலை செய் கிறார்கள். இவர்களில் 14,000 பேர் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் உதவியாளர்களாவர் என்றும் அவர் குறிப்பிட்டார். பெட்ரோல் நிலையங்களில் வேலை செய்வோரில் 21 விழுக்காட்டினர் மட்டுமே அந்நியத் தொழிலாளர்கள் என்பதும் எஞ்சியவர்கள் உள் நாட்டினர் என்பதும் பிடிஏஎம் நாடு தழுவிய நிலையில் நடத்திய ஓர் ஆய்வின் வழி தெரிய வருகிறது. இதனிடையே, மாதாந்திர அடிப்படையில் விலைகளை நிர்ணயிக்கும் நடைமுறை 2014 டிசம்பர் மாதம் அமலுக்கு வந்த தில் இருந்து ஷெல், பெட்ரோன், பெட்ரோனாஸ், பிஎச்பி, கால்டெக்ஸ் போன்ற நிறுவனங் களின் 30 முதல் 40 விழுக்காட்டு வரையிலான பெட்ரோல் நிலையங்கள் நட வடிக்கைகளை நிறுத்திக் கொண்டிருப்பதாக கைருல் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலை ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடக்கம் வாராந்திர அடிப்படையிலான விலை நிர் ணயம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மேலும் மோச மடைந் திருக்கிறது. இந்தப் போக்கு நீடித் தால் மேலும் பல வர்த்தகர்கள் தங்களுடைய வியாபாரத்தை கைவிடக்கூடும் என நாங்கள் கவலைப்படுகி றோம் என்று கைருல் கூறியதாக தி ஸ்டார் தெரிவித்தது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img