img
img

பிரௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணிகள் தீவிரம்.
வெள்ளி 12 மே 2017 12:31:54

img

ஜெரம், மே 12- ஜெரம் சுங்கை பூலோ பிரௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணிகள் தாமதமடைந்து வருவது குறித்து மலேசிய நண்பன் வெளியிட்ட செய்தியால் அப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெறத் தொடங்கியுள்ளன.கடந்த மூன்றாண்டுகளாக தாமதமாக கட்டுமானப் பணிகள் நடை பெற்று வரு வதன் நோக்கம் என்னவென்று பெற்றோர்களும் பொதுமக்களும் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் இப்போது துரிதமாக நடந்து வருவதைக் கண்டு பெற்றோர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்த வேளையில் நண்பனின் செய்திக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். நண்பனில் பள்ளியைப் பற்றி செய்தி பிரசுரிக்கப்பட்டதை அடுத்து தற்போது அப்பள்ளியின் கட்டுமானப் பணிகளுக்கு அதிகமான தொழிலாளர்களை குத் தகையாளர் நிறுவனம் வேலைக்கு அமர்த்தியதன் வழி அப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதற்கு நண்பன் நாளிதழின் செய் தியே முக்கிய காரணம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். இதேபோன்று கட்டுமானப் பணிகள் தொடருமானால் இன்னும் மூன்று மாத கால கட்டத்தில் பள்ளியின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறக்கூடும். பள்ளியின் கட்டுமானப் பணி தொய்வு ஏற்பட்டதற்கு யார் காரணம் என்பது முக்கியமல்ல. மாறாக பள்ளியின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று மாண வர்கள் பயன்பாட்டிற்கு இருக்குமானால் அதுவே பெற்றோர்களின் மகிழ்ச்சியாகும். கடந்த 2015ஆம் ஆண்டு பிரௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளிக்கான இரண்டு மாடிகளை கொண்ட புதிய கட்டடத்திற்கு துணைக் கல்வியமைச்சர் டத்தோ பி.கமலநாதன் அடிக்கல் நாட்டினார். இவ்வாண்டு ஜனவரி மாதம் புதிய கல்வி ஆண்டில் பள்ளியின் இந்த புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கட்டுமானப் பணியில் சுணக்கம் ஏற்பட்டு, பள்ளி கட்டடம் பூர்த்தியாகாமல் இழுபறி நிலையில் இருந்து வருவது குறித்து கடந்த 4.5.2017இல் மலேசிய நண்பன் தலைப்பு செய் தியாக வெளியிட்டு இருந்தது. பள்ளி கட்டி முடிக்கப்படாததால் மாணவர்கள் பழைய கட்டடத்தில் பயின்று வரும் அவல நிலையையும் மலேசிய நண்பன் தனது செய்தியில் சுட்டிக் காட்டியிருந்தது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img