1 எம்.டி.பி. விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படை யிலான போக்கை கொண்டிருக்க வேண்டும் என்று சி.ஐ.எம்.பி. வங்கி குழுமத்தின் தலைவரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் சகோதர ருமான டத்தோஸ்ரீ நஸிர் ரசாக் தெரிவித்துள்ளார். 1எம்டிபி ஊழல் குறித்து அனைத்துலக பத்திரிகைகள் வெளியிட்டு வரும் செய்திகள் 'அதிக வலியை' ஏற்படுத்தியுள்ள தாக அவர் குறிப்பிட்டார்.எனவே 1எம்டிபி நிதி விவகாரத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 1 எம்.டி.பி. விவகாரத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பது குறித்து விளங்கிக் கொள்ளும் வகையில் அதன் ஒட்டுமொத்த விவகாரத்தில் வெளிப் படையிலான போக்கை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக நஸிர் தெரிவித்தார்.கம்போடியாவில் நடைபெறும் ஆசி யான் வங்கிகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் நஸிர் மேற்கண்ட வாறு கூறினர். தன் அண்ணன் நஜீப்பிற்கு சொந்தமான வங்கி கணக்கிலிருந்து 70 லட்சம் அமெரிக்க டாலரை (280 லட்சம் வெள்ளி) சில அரசியல் தலைவர்களின் கணக் குகளில் தாமே மாற்றிவிட்டதாக கடந்த ஆண்டு நஸிர் அறிவித்தது முதல் அவர் பலரின் கவனத்தை ஈர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சில நிறுவனங்களும் தனி நபர்களும் வழங்கிய பணம் என்று தாம் நம்புவதாக நஸிர் தெரிவித்து இருந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்