சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாஹிர் நாயக்கை கைது செய்வதற்கு ஓர் அதிரடி வேட்டையை அனைத்துலக போலீஸ் ( இண் டர்போல்) வழி மேற் கொள்வதற்கு தேசிய புலனாய்வு நிறுவனம் களம் இறங்கியுள்ளது.இஸ்லாமிய போதகர் ஸாஹிர் நாயக்கை கைது செய்வதற்குரிய ஓர் அனைத்துலக போலீஸ் அறிவிக்கையை (ஆர்சிஎன்) பெறுவதற்காக ஒரு முறையான கோரிக்கையை தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) தயாரித்துள்ளது. இந்தக் கோரிக்கையை இந்தியாவில் உள்ள அனைத் துலக போலீசாரின் அலுவலகமான சிபிஐயிடம் நேற்று வியாழக்கிழமை என்ஐஏ ஒப் படைத்துள்ளது. அனைத்துலக போலீசாரால் ஒரு ஆர்சிஎன் வெளியிடப்பட்டுவிட்டால், எந்தவொரு அனைத்துலக அமைப்பும் நாயக்கை எந்த இடத்தில் கண்டாலும் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக் கலாம் என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்தது. சினமூட்டும் உரைகள் ஆற்றியது, வன்முறையைத் தூண்டியது, வெறுப்பை பரப்பியது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது, பணமோசடி போன் றவை சம்பந்தப்பட்ட புலன் விசாரணைகளை எதிர் நோக்கி இருக்கும். நாயக், சவூதி அரேபியாவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் பயணம் செய்வதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. ஜாமினில் வெளியே வர முடியாத பிடி ஆணையை அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பெற்றதுடன் என்ஐஏ தலைவர் ஷரட் குமாரின் அனுமதி கிடைத்த பின்னர் விரிவான சான்றுகளுடன் நாயக்கிற்கு எதிராக ஆர்சிஎன் கோரிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்தது. புலன் விசாரணைக்கு வரும்படி நாயக்கிற்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் கூறினர். நாயக்கிற்கு மூன்று சம்மன்கள் வழங் கப்பட்டன. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவருக்கு எதிராக எங்களிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை அனைத்துலக போலீசாருடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். அவர் தப்பியோடி தலைமறைவாக இருப்பதாக உலகளவில் கருதப்படுகிறது. அவரை எந்தவோர் அமைப்பும் கைது செய்ய முடியும் என்று ஓர் அதிகாரி கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்