(டுங்கூன்) பஞ்சரான காரின் முன் சக்கரத்தை மாற்றிக் கொண்டிருந்தபோது ஆடவரை லோரி மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பந்தாய் தீமோர் 2 நெடுஞ்சாலையின் 360.5ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்துள்ளது. மைவி ரகக் காரின் ஓட்டுநரான முகமட் சைலானி முகமட் ஷாபி (வயது 31) பலத்த காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட நபர் தன் சக நண்பர்களுடன் கோலா திரெங்கானுவிலிருந்து கெமமானுக்கு பயணம் செய்துள்ளார். செல்லும் வழியில் காரின் டயர் பஞ்சர் ஆகியுள்ளது. அதனை மாற் றுவதற்கு அவர் மட்டும் காரிலிருந்து இறங்கியுள்ளார். காரின் சக்கரத்தை மாற்றிக் கொண்டிருந்த வேளையில், அதே வழியில் வந்த லோரி கட்டுப் பாட்டை இழந்து காரை மோதியுள்ளது. காரின் சக்கரத்தை மாற்றிக் கொண்டிருந்த நபர் லோரியின் சக்கரத்தில் சிக்கி சில மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் அவ ரின் தலைப் பகுதி நசுங்கியதுடன் அவரின் உடலும் சிதைந்தது.காரில் அமர்ந்திருந்த மேலும் மூவரும் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழந்தவரின் சிதைந்த உடல் டுங்கூன் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. டுங்கூன் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அகமட் சைலானி யாகோப் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்