(பத்து காஜா) தைப்பிங்கிலுள்ள வாடிக்கையாளருக்கு பொருட்களை அனுப்பச் சென்றபோது தன்னை கும்பல் ஒன்று கடத்திவிட்டதாக கூறி நாடகமாடிய மாது போலீ சாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை முதல் முகநூலில் பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது அந்த மாது பத்து காஜா காவல் நிலையத்தில் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ இஸ்கண்டார் காவல் நிலையத்தில் பணி புரியும் போலீஸ் அதிகாரியின் மனைவி இவரென தெரிய வந்துள்ளது.தன்னை கடத்தல் கும்பல் கடத்திவிட்டதாக அப்பெண் தன் கணவரிடம் கூறியது டன், கைகள் கட்டியப்படி அவரின் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார். இதன் தொடர்பில் அம்மாதுவின் கணவர் பேரா தெங்கா மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.சம்பந்தப்பட்ட மாதுவை போலீசார் ஷா ஆல மில் கண்டுள்ளனர். அம்மாதுவிடம் விசாரணை மேற்கொண்டதில், பொதுமக்களின் பணத்தை ஏமாற்றியதால் பலர் என்னை தேடி வருவதாகவும் என் கணவரிடம் என்னை கடத்தல் கும்பல் கடத்தி விட்டதாகவும் பொய் சொன்னேன் என கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மேல் விசாரணையை மேற்கொண்டதில் இந்த கடத்தல் நாடகத்திற்கும் மாதின் கணவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.இந்த கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள மாதின் நண்பரான வான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாதிடம் மேல் விசாரணை தொடரப்பட்டு வருவதாக பேரா தெங்கா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் முகமட் சைனால் அப்துல்லா தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்