வீடுகளில் புகுந்து திருடுவதற்கு முன்பு அந்த வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டத்தை நன்கு கவனிக்கும் வகையில் கொள்ளையர்கள் இப்போது நமக்கே தெரியாமல் வீடுகளில் ரகசிய கேமராக்களைப் பொருத்தும் புதிய தந்திரத்தை கையாண்டு வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக வீடு புகுந்து திருடும் கும்பலின் நடவடிக்கைகளை முறியடித்தபோது அவர்களிடமிருந்து 6 ரகசிய கேமராக்களைப் பறிமுதல் செய்தபோது இவ்விவகாரம் அம்பலத்திற்கு வந்தது என்று ஷாஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஷாபியான் மமாட் கூறினார். தாங்கள் திருட வேண்டிய வீட்டில் அந்த வீட்டின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அந்த வீட்டில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி விடுகின்றனர். அதுவும் யாரும் சந்தேகப்படாத வகையில் வீட்டிலுள்ள பூச்சாடி போன்றவற்றில் அந்த ரகசிய கேமராக்களைப் பொருத்தி அந்த வீட்டில் உள்ளவர்களின் நட மாட்டதை கொள்ளையர்கள் முதலில் நன்கு கவனித்து வருகின்றனர். இதன் வழி எந்த நேரத்தில் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள், எந்த நேரத்தில் இருப்பார்கள் போன்ற விவரங்களை துல்லியமாக கண்டு பிடித்து விடுகின்றனர். பின்னர் சரி யான நேரத்தில் அந்த வீட்டி னுள் புகுந்து கொள்ளையடித்து விடுவதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்