தங்கள் பயிற்சியை முடித்துக்கொண்டுள்ள 369 மாணவர்கள், மலேசிய கல்வி அமைச்சின் மெத்தனப் போக்கின் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை பற்றி முடிவு செய்ய இயலாத ஓர் இக்கட்டான நிலையில் தத்தளித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நாடு முழுவதும் உள்ள 13 ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் கடந்த 2013 ஜனவரி மாதம் தங்கள் பயிற்சியைத் தொடங்கி 2016 நவம் பர் மாதம் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் ஆவர். பயிற்சி முடித்த இந்த ஆறு மாதங்களில் தாங்கள் இன்னும் நேர்காணலுக்கு அழைக்கப்படாதது குறித்தும், தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நில வியும் தங்களுக்கு வேலை வாய்ப்பு இன்னும் வழங்கப்படாதது குறித்தும் பாதிக்கப்பட்ட அம்மாணவர்கள் தங்கள் மனக்குறைகளை மலேசிய நண்பனிடம் தெரிவித்தனர். அம்மாணவர்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளிகளில் போதிப்பதற்காக பயிற்சி பெற்றவர்களாவர். அவர்களின் 83 பேர் ஆங்கில மொழியிலும், கணிதம் (25 பேர்), கேட்டல் திறனில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கான சிறப்புக் கல்வி (4 பேர்), தமிழ் மொழி (44), பாலர் பள்ளி (10), மலாய் மொழி (51), இஸ் லாமியக் கல்வி (23), கற்றலில் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான சிறப்புக் கல்வி (5), அறிவியல் (12), கலைக் கல்வி (4), வடிவமைப்பு/தொழில்நுட்பம் (24), இசைக்கல்வி (3), பின்தங்கிய மாணவர்களுக்கான சிறப்புக் கல்வி (33), ஆலோசனை/வழிகாட்டல் (24), வரலாறு (24) என மொத்தம் 369 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சுக்கு ஆறு தடவை இது தொடர்பான மகஜரை இம்மாணவர்கள் சமர்ப்பித்தும் இதுவரை ஆக்கப்பூர்வமான எந்த பதிலும் கிடைக்காமல் இருப்பது குறித்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மஹாட்சிர் காலிட்டின் கவனத்திற்கு அவர்கள் இம்மகஜரை அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகக் கடைசியாக, கடந்த மே 8-ஆம் தேதி கல்வி துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதனை சந்தித்து நேரடியாக இம்மகஜரை அவர்கள் சமர்ப்பித்த போது, ஆறாவது முறையாக கொடுக்கிறீர்கள் என்ற ஏளனமான ஒரு பதிலை அவர் தந்தாரே தவிர எங்கள் பிரச்சினைக்கு முடிவு காண்பது குறித்து எது வும் சொல்லவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறினர். நாங்கள் 369 பேர் அனைவரும் படித்தது ஐந்தரை ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பாகும். எங்களுடன் சீன, மலாய் மொழி மாணவர்களும் படித் தார்கள். சீன மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதம் நேர்காணல் முடிந்து, இந்த ஜனவரி மாதம் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மலாய் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி, மார்ச் மாதங்களில் நேர்காணல் முடிந்து கடந்த மே 2-ஆம் தேதி வேலைக்கு அமர்த்தப்பட்டு விட்டனர். எங்கள் 369 பேரின் நிலை குறித்து கல்வி அமைச்சில் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்ட போது, தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்கள் முழுமையாக இருக் கிறார் கள். அதனால் நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும். எப்போது நேர்காணலுக்கு அழைப்போம் என்பது எங்களுக்கேத் தெரியாது என்று பதில் கூறி விட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர்கள் சிலர் மலேசிய நண்பனிடம் கூறினர். ஆனால், நாங்களே தனிப்பட்ட முறையில் சில பள்ளிகளில் விசாரித்துப் பார்த்ததில் ஒரு பள்ளிக்கு தலா மூன்று, நான்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதை தெரிந்து கொண்டோம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். எங்கள் நிலைமையை விவரித்து மகஜரை தயார் செய்து கல்வி அமைச்சுக்குப் பல முறை அனுப்பி வைத்து விட்டோம். துணை அமைச்சர் கமலநாதனை கடந்த மே எட்டாம் தேதி, கெடா, தாமான் கெலாடியில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டட நிர்மாணிப்பிற்காக அவர் வருகை தந்திருந்தபோது எங்களின் பிரதி நிதிகள் கெடாவில் அவரிடம் மகஜரின் நகலை கொடுத்தனர். இது நாங்கள் ஆறாவது தடவையாக கொடுக்கும் மகஜராகும். எங்களிடமிருந்து மகஜரை பெற்றுக்கொண்ட கமலநாதன், ஓ! ஐ.பி.ஜி-யா? (ஆசிரியர் பயிற்சிக் கழகம்). ஆறாவது தடவையாக மகஜர் கொடுக்க வரீங் களா என்று ஓர் அலட்சியமான தோரணையில் பேசினார். எங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அவர் எதுவும் பேசவில்லை என்று அம்மாணவர்கள் தெரிவித்தனர். நாங்கள் அனைவரும் வெவ்வேறு பிரிவுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வருகிறோம். கல்வி அமைச்சின் இயக்குநரை சந்திப்பதற்கு நாங்கள் பல முயற்சிகளை எடுத்து விட்டோம். தொலைபேசி வாயிலாக அழைக்கும்போது வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றி, மாற்றி எங்களை அலைகழிக்கச் செய்கின்றனர். இதுநாள் வரை அந்த இயக்குநரை சந்திக்கவோ அல்லது அவருடன் பேசவோ எங்களால் முடியவில்லை. இதைத் தவிர்த்து, எங்கள் நேர்காணலை ஏற்பாடு செய்வது கல்வி ஆணையம். அவர்களுடன் தொடர்புகொண்ட போது, கல்வி அமைச்சின் உத்தரவு இல்லாமல் நேர்காணலுக்கு அழைக்க முடியாது என்று முடிவாகக் கூறி விட்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில், பயிற்சிப்பெறாத தற்காலிக ஆசிரியர்கள் என்று ஒரு குழுவினரை தேர்வு செய்து ஆசிரியர் பயிற்சிக் கழகத்திற்கு பயிற்சிக்கு அனுப்பினார்கள். அவர்கள் இந்த மே மாதம் பயிற்சி முடிந்து வெளியேறுகிறார்கள். அவர்கள் ஜூன் மாதம் பணியில் அமர்த்தப்படுவது உறுதி என்றும் கூறியிருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என்று வினவியபோது, பயிற்சிக்கு வரும்போதே அவர்கள் பணி உறுதிக்கான உடன்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும், ஜூன் மாதம் தாங்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மகஜரையும் சமர்ப்பித்திருந்தார்கள் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி தங்களிடம் தெரிவித்ததாக அவர்கள் மேலும் கூறினர். ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக சமூக வலைத்தளம், நாளிதழ்களில் பெற்றோர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் நிறையவே பேசி வருகின்றனர். ஏன் எங்களுக்கு மட்டும் இந்த கதி? இது எந்த விதத்தில் நியாயம்? தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்