(பெட்டாலிங் ஜெயா) மாதம் ஒன்றுக்கு வெறும் 1,500 வெள்ளி வருமானத்தை வைத்து குடும்பம் நடத்திப் பாருங்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு சவால் விடுத்துள்ளார் பிரிபூமி பெர்சத்து கட்சியின் இளைஞரணி தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான். ஆசியான் நாடுகளிலேயே மலேசியாவில் தான் வாழ்க்கைச் செலவினம் மிகவும் குறைவாக உள்ளது என்று நஜீப் கூறியிருப்பதை இது நிரூபிக்க உதவும் என அவர் கருத்துரைத்தார்.பெரும்பாலான மலேசியர்களைப் போன்று ஏன் அவரும் (நஜீப்) 1,500 வெள்ளி சம்பளத்தில் வாழ்ந்து பார்க்க முயற்சிக்கக் கூடாது? அந்த சம்பளத்தில் பொருட்களை வாங்கி பார்க்கட்டுமே. அவரால் அப்படி வாழ முடியுமா? அது அவ்வளவு எளிதானதா என்று சைட் சடிக் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். உலகம் முழுவதும் 133 நகரங்களில் பொருட்கள், சேவைகளின் விலைகளை ஒப்பிடும், 2017-ஆம் ஆண்டிற்கான பொருளாதார உளவுத்துறை பிரிவின் ஆய்வு முடிவுகளை மையமாக வைத்து பிரதமர் நஜீப் அவ்வாறு கருத்துக் கூறியிருக்கிறார். இது ஆக்கப்பூர்வமான முடிவாக இருந்த போதிலும், நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமைகளைக் குறைக்கும் முயற்சிகளை அரசாங்கம் நிறுத்தாது என்று நஜீப் நம் பிக்கை தெரிவித்துள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்