(பெட்டாலிங் ஜெயா) ஆடம்பர கார்கள், அனைத்துலக முத்திரைப் பதித்த கைப்பைகள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமான வாழ்க்கை - இவை பலரும் கனவு கண்டு வரும் ஒரு வாழ்க்கைதான். ஆனால், மாதம் ஒன்றுக்கு 4,540 வெள்ளிக்கும் குறைவாக ஊதியம் பெறும், 37 வயது மதிக்கத்தக்க ஆடவரால் இந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா? அல்லது நினைத்து தான் பார்க்க முடியுமா? நமக்கே இந்த கேள்வி எழுகிறது என்றால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? அலோர்ஸ்டாரில் உள்ள அந்த 37 வயது குடிநுழைவு அதிகாரியை குறிவைத்து எம்.ஏ.சி.சி மேற் கொண்ட நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 கோடியே 79 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட ஊழல் நடவடிக் கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். கிரேட் கே.பி42 பிரிவைச் சேர்ந்த அந்த அதிகாரி மாதம் ஒன்றுக்கு வெ.1,471 முதல் வெ.4,540 வரைக்குமான சம்பள பிரிவில் இடம் பெற்றுள்ளார். ஆனால், அவரி டமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 25 லட்சம் வெள்ளியாகும். கெடா, ஜித்ராவில் உள்ள அவரின் வீட்டிலிருந்து அபகரிக்கப்பட்ட பி.எம். டபள்யூ எக்ஸ் 6, பி.எம்.டபள்யூ 320, டொயோட்டா வெல்ஃபையர், பி.எம். டபள்யூ ஆர்1200, சூப்பர் பைக், ஆடம்பர கைக்கடிகாரங்கள், அனைத்துலக முத்திரையைக் கொண்ட கைப்பைகள் ஆகியன அவற்றுள் அடங்கும். அந்த அதிகாரியின் வங்கிக் கணக்கில் மட்டும் வெ.10 லட்சம் நிரந்தர கையி ருப்பில் இருந்தது. புத்ராஜெயாவில் அந்த அதிகாரி பணியில் அமர்த் தப்பட்டிருந்த சமயம், வேலை பெர்மிட்டுகளை அங்கீகரிப்பதற் காக லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. தற்போது தீவிர கண் காணிப்பில் இருப்பதாக கெடா மாநில எம்.ஏ.சி.சி இயக்குநர் முகமட் ஃபாவ்சி முகமட் கூறினார். வேலை பெர்மிட்டுகளுக்காக அந்த அதிகாரியின் அங்கீகாரம் பெற்றுள்ள நிறுவனங்களின் பெயர் பட்டியலை குடிநுழைவு இலாகாவிடம் தாங்கள் கோரி யிருப்பதாகவும் அது கிடைத்ததும் அந்த அதிகாரிகளின் பிரதிநிதிகளை தாங்கள் அணுகவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்