)இஸ்கண்டார் புத்திரி) தன் மகளை கற்பழித்த சம்பவம் தொடர்பில் 53 வயது டைய ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.முன்னதாக தனது 27 வயது மகளிடம் காமச் சேட்டை புரிந்ததற்காக கடந்த ஆண்டு சிறைத்தண்டனை பெற்று அண்மையில்தான் சிறைச்சாலையிலிருந்து வெளியான அந்த நபர் கடந்த வாரம் வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு கங்கார் பூலாய், தாமான் டேசா பெர்மாய், ஜாலான் கூனாங்கிலுள்ள தனது வீட்டில் 8 வயதுடைய மகளை கற்பழித்துள்ளதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் நூர் ஹாஷிம் முகமட் இங்கு தெரிவித்தார். அச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் 13 வயது அண்ணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.18 மணிக்கு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து முடி வெட்டும் தொழிலை மேற் கொண்ட அந்த சந்தேக நபர் அவரின் வீட்டிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். போலீசாரின் விசாரணையில் ஒரே வீட்டில் தங்கியுள்ள ஆறு பிள்ளைகளில் கடைசி மகளான அந்த 8 வயது சிறுமியை அந்த ஆடவர் கற்பழித்தது விசாரணை யில் தெரிய வந்ததாக குறிப் பிட்ட நூர் ஹாஷிம் முகமட் சந் தேக நபர் தனது மூத்த மகளிடம் காமச் சேட்டையில் ஈடுபட முயன்றதற்காக நான்கு மாத சிறை வாசம் அனுபவித்துள் ளதாகவும் குறிப்பிட்டார். சந்தேக நபர் விசாரணைக் காக வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்