அனுமானிக்க முடியாத அளவிற்கு மழை பெய்து கொண்டிருப்பதால் இவ்வாண்டு நாடு முழுவதிலும் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக மூலப் பொருள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு கூறியுள்ளது. மலேசிய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் வழி, இது உறுதி செய்யப் பட்டிருப் பதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜுனாய்டி துவாங்கு ஜபார் கூறினார். அண்மையக் காலமாக மழை குறியீடு நிர்ணயிக்க முடியாமலும் அனுமானிக்க முடியாத அளவிற்கும் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சில வேளைகளில் தலைநகர் உட்பட நாடு முழுவ திலும் கடும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமை ச்சு கவலை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளைப் போல் கடும் வெயில் இவ்வாண்டு இருக்காது. எல் நினோ எனும் அதிக வெயில் அவ்வளவு வேகமாக இல்லை. இதனால் அண்டை நாடுகளில் காடுகள் பற்றி எரிவதனால் மலேசிய அனுபவித்த புகை மூட்டப் பிரச்சினை இவ் வாண்டு இருக்காது. ஆனால், அதற்கு மாறாக லா நினா எனும் வெள்ள அபாயம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வான் ஜுனாய்டி கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்