பெர்லிஸ் மாநில முஃப்தி முகமட் அஸ்ரி ஸைனுல் தொடர்ந்தாற் போல் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் வகையிலான பல கருத்துக்களை வெளிப் படுத்தி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதன் தொடர்பாக நாடு தழுவிய அளவில் பல அரசு சாரா இயக்கங்களும் மலேசிய இந்து சங்கத்தை சார்ந்த வர்களும் போலீஸ் புகார் செய்து வருகின்றனர். இந்த புகார்களை கருத்தாய்வில் கொண்டு முகமட் அஸ்ரி ஸைனுல் மீது காவல்துறை பாரபட்சம் இல்லாத சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் தலைவரை மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. முகமட் அஸ்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்த யாரோ ஒரு நபரை உடனடியாக கைது செய்த காவல்துறை. இந்து சமயத்தை இழிவுபடுத்தியும் தவறான கருத்துக்களையும் பரப்பி வரும் முகமட் அஸ்ரி மீது உடனடி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய விசயமாகும். பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இருவேறு சமயங்களை ஒப்பிட்டு பேசுவது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஒரு போதும் சுபிட்சத்தை கொண்டு வராது என்பது எங் களுடைய கருத்து. மேலும் ஜாகீர் நாயக் போன்ற சர்ச்சைகுறிய மத பேச்சாளர்கள் மற்ற சமயத்தோடு தனது சமயத்தை ஒப்பிட்டு சொற்பொழிவு ஆற்றுவதற்கு அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும். அது நாட்டு மக்களிடையே ஒற்றுமையின்மையையும் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கவும் வகை செய்யும் எனவும் மலேசிய இந்து சங்கம் இவ்வறிக்கையின் வழி வழியுறுத்துகிறது. தொடர்ந்து இது போன்ற சமய நிந்தனைகள் நடைப்பெறாமல் இருக்கும் வகையில் மாமன்னரிடமும் மாநில ஆட்சியாளர்களிடமும் மகஜர் ஒன்று விரைவில் சமர்பிக்கப்படும் என்று மலேசிய இந்து சங்கம் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்