பெண்கள் சொந்தத் தொழிலில் கால்பதித்து முயற்சிகளை மேற் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று விமாஸ் நிறுவனத்தின் தோற்றுநர் ஹேம லதா கிருஷ்ணன் நேற்று கூறினார்.மற்றவர்களுக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட காலம் போய் தற்போது நமது இந்தியப் பெண்கள் பல தொழில்துறைகளில் வெற்றிநடை போட்டு வருகின்றனர். தனித்து வாழும் தாய்மார்கள் உட்பட பல பெண்கள் சொந்தமாக முயற்சிகளை மேற்கொண்டு தொழில் துறைகளில் வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால் ஒரு சில பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தங்களின் வாழ்க்கையில் பின்தங்கி வருகின்றனர். இப்படிப்பட்ட பெண்களுக்கு உரிய வழி காட்டிகளை வழங்க வேண்டும் எனும் நோக்கில் தான் விமாஸ் பல பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெண்களுக்கு அதிக நாட்டம் உள்ள அழகு கலையை தேர்வு செய்து அதில் உள்ள வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அழகுக் கலையில் நிபுணத்துவம் பெறுவது எப்படி, எப்படி விளம்பரம் செய்வது, வாடிக்கையாளர்களை எப்படி கவர்வது, அழகுக் கலையை நவீனமாக்குவது எப்படி உட்பட பல பயிற்சிகளை நாங்கள் வழங்கி வருகிறோம். இப்பயிற்சிகளை பெற்று பல பெண்கள் தற்போது சொந்தமாக கடைகளைத் திறந்து வர்த்தகத்தை மேற்கொண்டு வரு கின்றனர். குறிப்பாக இப்பயிற்சி யைப் பெற்ற 6 பேர் இன்று முதலா ளிகளாக உருவெடுத்துள்ளனர்.ஆகவே சொந்த தொழில் மட்டுமே பெண்களை சிறப்பான முறையில் உயர்த்தும் என்று ஹேம லதா செய்தியாளர்களிடம் கூறி னார். இதனிடையே விமாஸில் பயிற்சி பெற்ற 85 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண் மையில் நடைபெற்றது. தொலைக்காட்சி புகழ் சுஷ்மிதா, விமாஸின் தோற்றுநர் ஹேமலதா, நிர்வாகி காயத்திரி உட்பட மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண் டதுடன் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை எடுத்து வழங் கினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்