img
img

எஞ்சினியரிங் கவுன்சிலிங் A to Z
புதன் 15 ஜூன் 2016 14:37:37

img

எஞ்சினியரிங் படிப்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள் முடிந்துவிட்டன. சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அடுத்து, கவுன்சிலிங்... பிடித்த கல்லூரியில் பிடித்த படிப்பைத் தேர்வு செய்வதற்கான களம் என்பதால் கவுன்சிலிங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கவுன்சிலிங்கை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்னென்ன நடைமுறைகள்..? விரிவாகப் பார்க்கலாம். * தமிழகத்தில் சுமார் 570 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் (ஒற்றைச்சாளரக் கலந்தாய்வு) மூலம் நிரப்பப்படும். சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஜூன் மூன்றாவது வாரத்தில்இந்த கவுன்சிலிங் நடைபெற உள்ளது. கவுன்சிலிங் குறித்து எவ்விதப் பதற்றமும் அடையத் தேவையில்லை. * கவுன்சிலிங் குறித்த தகவல்கள் இ-மெயில் மூலமாகத தெரிவிக்கப்படும். எந்த மெயில் ஐ.டி. மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தீர்களோ, அந்த ஐ.டிக்குத்தான் கடிதம் வரும். பாஸ்வேர்டை மறந்துவிடாமல் அடிக்கடி திறந்து பாருங்கள். கவுன்சிலிங்குக்குப் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் மாணவர்கள் பங்கேற்கலாம். கவுன்சிலிங் கடிதத்தைக் காட்டினால் இருவருக்கும் அரசுப் பேருந்துகளில் பாதிக் கட்டணச் சலுகை வழங்கப்படும். * கவுன்சிலிங்குக்குக் கிளம்பும் முன்பே, படிப்பையும், கல்லூரியையும் முடிவுசெய்துவிடுங்கள். 5 கல்லூரிகள், 5 படிப்புகளை வரிசைப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. கவுன்சிலிங்கில் நீங்கள் படிப்பு/கல்லூரியைத் தேர்வு செய்ய மிகச்க்சில நிமிடங்களே கிடைக்கும். அதனால், ஒரு கல்லூரி கிடைக்காத பட்சத்தில் இன்னொரு கல்லூரியை உடனடியாகத் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். ஒரே பெயரில் பல கல்லூரிகள் இருப்பதால் குழப்பம் நேரலாம். அதனால் கல்லூரிகளின் குறியீட்டு எண்ணை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img