மலேசியாவில் பிறந்து ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இருப்போரை பதிவு செய்யும் மெகா மை டப்தார் இயக்கத்திற்கு மஇகா தலைமையேற்று வழி நடத்திச் செல்வது குறித்து பல தரப்பினர் குறை கூறியுள்ளனர். மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிர மணியம் அறிவித்த இந்த நடவடிக்கை, விரைவில் நடைபெறவிருக்கும் 14ஆவது பொதுத் தேர் தலை முன்னிட்டு வாக்குகளை கவர்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஓர் அரசியல் தந்திரம் என்று விமர்சகர்கள் குறை கூறியுள்ளனர். நாடற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் அரசியல் ரீதியில் போதிய ஆர்வம் காட்டவில்லை என்று ஃபிரீடம் அமைப்பின் பேச் சாளர் என்.கணேசன் கூறினார். இம்மாதிரியான விவகாரங்களை கையாளும்போது தேசிய பதிவு இலாகாவால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். ஆனால், இப்போது அரசாங்கம் இந்த பொறுப்பை ஓர் அரசியல் கட்சியிடம் ஒப்படைத்து இருக்கிறது என்று கணேசன் கூறினார். அவர் இப்போது பினாங்கில் இம்மாதிரியான விவகாரங்களை கவனித்து வருகிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்