ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் விவகாரத்தில் தலையிடுவதுடன் வீடுகளை உடைக்க நோட்டீஸ் வழங்கியுள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் மீது அப்பகுதி மக்கள் நேற்று செந்தூல் போலீஸில் புகார் செய்தனர். பத்துகேவ்ஸ் உட்பட பல பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஜிஞ் சாங் செலாத்தான் தம்பா ஹானில் லோட் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவ்விடத்திற்கு விரைவில் நில உரிமை பத்திரங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மக்கள் அப்பகுதியில் வீடுகளை கட்டி பல ஆண் டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வீடுகள் அமைந்திருக்கும் நிலம் மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கப்பட்டது. ஆகையால் வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் பல நோட்டீஸ்களை வழங்கி வருகிறது. ஆகக் கடைசியாக வழங்கிய நோட்டீசின் அடிப்படையில் இப்பகுதி மக்கள் மே 18ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும்.இல்லையென்றால் வீடுகள் அனைத்தும் உடைக்கப்படும் என டிபிகேஎல் எச்சரித்துள்ளது. இப்படி ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் வகையில் தான் பிஎஸ்எம் அதில் தலையிட்டதுடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பிஎஸ்எம் கட்சியில் மத்திய செய லவை உறுப்பினர் அருட்செல்வம் கூறினார். இவ்வீடமைப்புப் பகுதி அமைந்துள்ள நிலத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஏற்கெனவே மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்று விட்டது.இனி இப் பிரச்சினையில் உரிய முடிவுகளையும் நடவடிக்கையும் எடுக்க வேண்டிய உரிமை மேம்பாட்டு நிறுவனத்திற்கு தான் உண்டு.ஆனால் இன்றைய தினம் வரை கோலாலம்பூர் மாநகர் மன்றம் இப்பிரச்சினையில் தலையிட்டு வருவது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கோலாலம்பூர் மாநகர் மன்றத்தைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகளை தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகிறது. அப்படி விசாரணையில் சிக் கியுள்ள ஓர் உயர் அதிகாரி தான் ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் வீட்டு பிரச்சினையில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதன் அடிப்படையில் இவ் விவ காரத்தில் ஏதோ தில்லு முல்லு நடந்திருக்கும் என சந்தேகம் எங்களுக்குள் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவ்விவகாரத்தை போலீஸ் அதிகாரிகள் உடனடியாக கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனும் நோக்கில் தான் அப்பகுதி மக்கள் போலீஸ் புகார் செய்துள்ளனர் என்று அருட்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் இன்று மூன்று பிரிவுகளாக பிரிந்து உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இதில் ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த பொன்னம்பலம் கீழ் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இதன் அடிப் படையில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தினர் இந்நடவடிக்கை குழுவை சந்தித்து பேச வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது என்றும் அருட்செல்வம் கூறினார். இதனிடையே ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் வீடமைப்பு விவகாரம் குறித்து விரைவில் மனித உரிமை ஆணையம், தேசிய ஊழல் தடுப்பு ஆணை யத்திலும் புகார் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்