img
img

இந்தியர்களுக்கு கிடைக்கின்ற மானியம் துஷ்பிரயோகமா?
செவ்வாய் 09 மே 2017 13:46:12

img

அரசாங்கத்திலிருந்து இந்திய சமுதாயத்திற்கு கிடைக்கக்கூடிய மானியம் சில தரப்பினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுமானால் அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்வதில் இந்தியர்கள் ஒரு போதும் அஞ்சக்கூடாது. மக்களுக்கான பணம் மக்களுக்கே சென்றடைய வேண்டும். நெஞ்சுரத்துடன் துணிந்து புகார் செய்யுங்கள். உங்களை பாதுகாக்கும் அரணாக நாங்கள் இருக்கிறோம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ ஸூல்கிப்ளி அகமட் நேற்று சூளுரைத்தார். இந்திய சமுதாயத்திற்காக அரசாங்கம் அமல்படுத்தப்படவிருக்கும் நீல வியூக பெருந்திட்டத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் சலுகைகளும் இந்திய சமுதாயத்தை சென்றடைவதை உறுதி செய்ய நாங்களும் அணுக்கமாக கண்காணித்து வருவோம் என்று பலத்த கரவொலிக்கிடையில் டத்தோ ஸூல் கிப்ளி தெரிவித்தார். இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கு ஏற்ப அதன் சலுகைகள் சமுதாயத்தை சென்றடைய வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அதன் பகிர்ந்தளிப்பில் எதுவும் மீறப்படுமானால் உரிய நடவடிக்கையை எடுப்போம் என்று டத்தோ ஸூல்கிப்ளி திட்டவட்டமாக தெரிவித்தார். நேற்று மலேசிய நண்பன் தலைமை அலுவலகத்தில் சமூகத் தலைவர்கள், அரசு சார்பற்ற இயக்கங்களின் பொறுப்பாளர்கள், கோயில் தலைவர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட லஞ்சத்திற்கு எதிரான மாபெரும் பிரச்சார இயக்கத்தை டத்தோ ஸூல்கிப்ளி அகமட் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். நாட்டில் லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை முழு வீச்சில் வேரறுக்கும் அனல் கக்கும் ‘கெரா’ இயக்கத்தை மலேசிய நண்பன் நாளிதழுடன் இணைந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ( எம்.ஏ.சி.சி.) தொடங்கியது. லஞ்சம் ‘கொடுக்காதீர், தீர்த்துக்கொள்ளாதீர், இணங்கிப் போகாதீர்’ என்ற முப் பரிமாணப் பொருளுடன் மக்களிடையே லஞ்சத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்த்தும் வகையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் மற்றும் சீனம் ஆகிய மூன்று நாளிதழ்கள் தங்களின் பத்திரிகை சகாவாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து கொண் டது. இந்தப் பிரச்சாரத்திற்கு தமிழில் தேர்வு செய்யப்பட்ட ஒரே அதிகாரத்துவ நாளிதழாக மலேசிய நண்பன் தேர்வு செய்யப்பட்டது. மலேசிய நண்பன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் முன்னிலையில் மாலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் நோக்கம் குறித்து தனது 40 நிமிட உரையில் டத்தோ ஸூல்கிப்ளி அகமட் விளக்கினார். நாட்டில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் புரையோடிக்கொண்டு இருக்கும் லஞ்சத்தையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் வேரறுப்பதில் சமூகத்தின் கடப்பாடு மிக மிக முக்கியம் என்றார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையாளராக தாம் நியமிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு வாரமும் காலண்டரில் ஒரு வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் தற்போது லஞ்சம், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக தமது தலைமையிலான குழுவினர் முழு வீச்சில் களம் இறங்கி லஞ்சம் வாங்குபவர்கள் மற்றும் கொடுப்பவர்களுக்கு எதிராக வேட்டையாடி வருவதாக அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் டத்தோ, டத்தோஸ்ரீ, டான்ஸ்ரீ அந்தஸ்தில் உள்ள பலர் தற்போது தூக்கத்தை தொலைத்து விட்டு தங்களை எப்போது எம்.ஏ.சி.சி. வேட்டையாடப் போகிறது என்று நிம்மதியற்ற நிலையில் அஞ்சத் தொடங்கிவிட்டனர். எந்த நேரத்திலும் பிடிபடலாம் என்று நடுங்கிய வண்ணம் இருக் கின்றனர். லஞ்சம் வாங்குபவர்கள், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றவர்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி லஞ்ச குற்றவாளிகளை வேட்டையாடி கைது செய்வதுதான் எங்களின் தற்போதைய தலையாய நோக்கமாகும். லஞ்ச பேர்வழிகள் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ‘பிரிம்’ உதவித் தொகையைகூட சூறையாட தயங்குவதில்லை. அந்த அளவிற்கு ஈவிரக் கமற்றர்களாக மாறியுள்ளனர். தனக்கு கிடைக்கும் பிரிம் தொகையை வாகனமோட்டிசாலை சோதனையின் போது, லஞ்சமாக 50 வெள்ளியை கொடுக் கிறார். பிறகு ஒரு ஏஜென்சிக்குச் செல்லும் அங்கு ஒரு நூறு வெள்ளியை லஞ்சமாக கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இப்படியே கொடுத்து விட்டு கடைசியில் கையில் ஒன்றுமில்லாத நிலையில்தான் அவர் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று டத்தோ ஸூல்கிப்ளி உவமை காட்டினார். வருகின்ற 2020 க்கும் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகும் நிலையில் அது லஞ்சமற்ற ஒரு தூய்மையான நாடாக தோற்றம் காண்பதற்கு நான் உறுதி பூண்டுள்ளேன். ஒரு குடும்பத்தில் சகோதரர்கள்,பேரப்பிள்ளைகள் இருப்பது போல் உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், என் தந்தை, என் பிள்ளைகள், என் பேரப் பிள்ளை எம்.ஏ.சி.சி.யில் வேலை செய்கிறார்கள் என்று சொல்லுங்கள். எம்.ஏ.சி.சி.யில் வேலை செய்கின்ற நாங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மலாய்க்காரர்கள்,சீனர்கள், இந்தியர்கள் என்ற பேதமின்றி மலேசியர்கள் என்ற உணர்வோடு லஞ்சத்தை ஒன்றிணைந்து வேரறுப்போம். எம்.ஏ.சி.சி. ஒரு அரசாங்க ஏஜென்சி, அவர்கள் அனைவரும் அரசாங்கம் ஊழியர்கள் என்ற தோற்றத்தை மாற்றி அது முழுக்க - முழுக்க மக்கள் கேந்திரம் என்று தோற்றத்தை தற்போது ஏற்படுத்தி வருகிறது. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் மிக இழிவான செயல் என்ற ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் மலேசிய நண்பனுடன் இணைந்து இந்த மாபெரும் பிரச்சாரத்தை செய்வதில் எம்.ஏ.சி.சி. பெருமிதம் கொள்வதாக உணர்ச்சிப் பொங்க டத்தோ ஸூல்கிப்ளி தனது உரையில் குறிப்பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img