வாழ்வில் நம்பிக்கை இருந்தால் நாம் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு காரியமும் நிச்சயம் வெற்றி பெறும். குறை என்பது எவரிடம் இல்லை? பெரும் பாலான சூழல்களில் அது மற்றவர்களின் பார்வையைப் பொறுத்துள்ளது. தன்னிடம் உள்ள குறைகளை ஒட்டுமொத்தமாக வேரறுத்து சாதனை படைத் துள்ளார் ஏழு வயது மது பார்கவி விஜயகுமார். ஆட்டிசம் எனும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட மது பார்கவி தன் கைகளால் பென்சிலை கூட பிடிக்க முடியவில்லை. அதனால் அவர் எழுதுவதை விரும்புவதில்லை. அப்படி இருந்தும் ஏழாவது வயதில் சிறுவர்களுக்காக தனது முதலாவது புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். தங்கக் கிளி மற்றும் மாய தேனீர்க்கெண்டி என்ற தலைப்புகளில் மது பார்கவி எழுதிய 24 பக்க புத்தகம் நேற்று முன் தினம் தேசிய தொல்பொருள் காட் சியக அரங்கத்தில் வெளியீடு கண்டது. இந்நிகழ்ச்சியின் போது மது பார்கவி சற்று பதற்றமாக காணப்பட்டாலும், தனது புத்தகத்தில் வெளியான இரண்டு சிறுகதைகளில் ஒன்றை வாசித்தார். தனது தாயார் ஜெகதீஸ்வரி கிருஷ்ணன் உடனிருக்க மது பார்கவி நிதானமாக கதையை வாசித்தது அரங்கில் நிலவிய நிசப்தத்தின் ஊடே நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை அசர வைத்தது. மது பார்கவியின் இந்த வளர்ச்சி ஆச்சரியமளிக்கிறது என்று கூறுகிறார் அச்சிறுமியின் பயிற்றுநரான மகாலட்சுமி தவமணி (37). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்கவிக்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் மிகவும் குறைவாக இருந்தது. தனது கையால் பென்சிலை பிடிக்க இயலாத மது பார்கவிக்கு களிமண், கோலி குண்டுகள், பிசைந்த மாவு ஆகியவற்றைக் கொடுத்து கைகளில் பற்றும் சக்தியை அதிகரிக்கச் செய்ததாக அவர் விவரித்தார். மகாலட்சுமி கடந்த 2014 முதல் மது பார்கவிக்கு பயிற்சி அளித்து வருகிறார். என் மகளை வளர்ப்பதை நான் என்றுமே சவாலாகக் கருதியதில்லை. இது எனக்கு ஒரு நல்ல அனுபவம் என்று கூறினார் மது பார்கவியின் தாய் ஜெகதீஸ்வரி.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்