img
img

சுப்ரமணியத்திற்கு எதிராக இராமலிங்கம் தொடுத்த வழக்கு.
திங்கள் 08 மே 2017 13:23:36

img

ம.இ.காவின் முன் னாள் தேசியத் தலை வர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட் டதை எதிர்த்து கட்சியின் நடப்பு தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிர மணியத்தின் மீது அதன் வியூக இயக்குநர் கே.ராமலிங்கம் உட்பட எழுவர் தொடுத்திருந்த வழக்கு இன்று திங்கட்கிழமை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இராமலிங்கத்துடன் வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பென்னடிக், எம்.சத்தியமூர்த்தி, ஜார்ஜ் அலெக்ஷாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம், டத்தோ வி.எம் ராஜூ ஆகியோர் இந்த வழக்கை தொடுத்திருந்தனர்.ஐவர் இவ்வழக்கிலிருந்து விலகிக் கொண்ட போதிலும், இராமலிங்கம் தலை மையிலான மேலும் மூவர் இவ்வழக்கை தொடர்ந்து வருகின்றனர். டாக்டர் சுப்பிரமணியம், கட்சியின் உதவித் தலைவர்களான டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ டி.மோகன், ம.இ.கா தலை மைச் செயலாளர் ஏ.சக்திவேல், வழக்கறிஞர் ஏ.வசந்தி, சங்கங்கள் பதிவகத்தின் தலைமை இயக்குநர் முகமட் ராஸின் அப்துல்லா, அதன் விசாரணை அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகியோரை பிரதிவாதிகளாக இராமலிங்கம் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். டத்தோஸ்ரீ பழனிவேலை கவிழ்ப்பதற்கு சங்கங்கள் பதிவகத்துடன் (ஆர்.ஓ.எஸ்.) சதித்திட்டம் தீட்டியதாக டாக்டர் சுப்பிரமணியம் உட்பட எழுவருக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிரடியான உத்தர விற்கு ஏற்ப, அவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுமா என்பதை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெறும் இன்றைய வழக்கு முடிவு செய்யும். அந்த எழுவருக்கும் எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி (2017) உத்தரவு பிறப்பித்தது.அதனை எதிர்த்து டாக்டர் சுப்பிரமணியம் கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். பழனி வேல் தரப்பினர் தொடுத்த அவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியம் தமது மனுவில் கோரியுள்ளார். அவ்வகையில் சுப்ரா செய் துள்ள அம்மனு ஏற்றுக் கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதும் இன்று தெரிய வரும். பழனிவேல் ஆதரவாளர்கள் தொடுத்த இவ்வழக்கை தள்ளுபடி செய்வதில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் உட்பட எழுவர் கடந்த 11.7.2016-ஆம் தேதி வெற்றி பெற்றனர். ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். கடந்த 10.1.2017 மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை உடைத்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. -தி மலேசியன் டைம்ஸ்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img