பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி யின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இதுவரை இருந்து வந்துள்ள நாட்டின் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ள வாழ்க்கைச் செலவினங் களின் அதிகரிப்பின் காரணமாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கான தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. மாநில உதவித் தொகைகள் குறைக்கப்பட்டது, ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளன. அதன் தாக்கத்தை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறுகிறது.நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தல் 2018-இல்தான் என்றாலும், அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது மிகவும் பரபரப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர்களில் 15 விழுக்காட்டினராக இருக்கக்கூடிய அரசு ஊழியர்கள் இம்முறை தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்று அம்னோ அடிமட்ட தலைவர்களில் ஒருவரான ரிஸால்மான் மொக்தார் கருத்துரைத்தார்.நாம் இந்த பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வு காண வேண்டியுள்ளது. தவறினால் இதன் பாதிப்பை நாம் சந்திக்க நேரிடும் என்றும் அவர் சொன்னார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களை ஈடு செய்யும் நடவடிக்கையில் அரசாங்க ஊழியர்கள் மிகப்பெரிய கடனாளியாக மாறிவிட்டனர். சுமார் 60,000-க்கும் மேற்பட்டவர்கள் திவாலாகும் அபாயம் நிலவுவதாக கியூபெக்ஸ் தலைவர் அஜி மூடா அண்மையில் கூறியிருந்தார்.வாழ்க்கைச் செல வினங்கள் அதிகரிப்பின் நேரடி தாக்கம்தான் இது. அரசு ஊழியர்கள் தங்கள் சக்திக்கும் மிஞ்சிய கடனை எடுத்து, திருப்பிச் செலுத்த முடியாமல் திண்டாடு கின்றனர் என்றார் அவர். கோலாலம்பூர் அல்லது பினாங்கு போன்ற பெரிய நகரங்களில் வாழும் அரசு ஊழியர்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். பகுதி நேர வேலைகளை பார்க்க முடியாத சூழலில் அவர்கள் இருப்பதே இதற்கு காரணமாகும் என்று ஓர் அரசியல் ஆய்வாளரான அடிப் சுல்கப்லி கூறுகிறார். எனி னும், வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு தொடர்பில் மக்களின் சுமைகளை குறைக்க தாங்கள் அதிகம் செய்திருப்பதாக பிரதமர் நஜீப் கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்