ஊழலுக்கு எதிரான தங்கள் போராட்டத்தின் உச்சக்கட்டமாக 3ஜே மற்றும் கெரா (ஊழல் ஒழிப்பு புரட்சி இயக்கம்) என்ற பெயரில் இரு மாபெரும் இயக்கங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) இன்று தொடங்குகிறது. இந்த இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு மலேசிய நண்பன் நாளிதழ் உட்பட நாட்டின் முக்கியமான மும்மொழி முன்னணி நாளேடுகளை எம்.ஏ.சி.சி. தேர்வு செய்துள்ளது. இன்று மாலை 6.00 மணிக்கு மலேசிய நண்பன் தலைமையகத்தில் நடைபெறும் இவ்வியக்கத்தின் அறிமுக நிகழ்ச்சியில் எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டத்தோ ஸுல்கிப்ளி அஹ்மட், எம்.ஏ.சி.சி. அதிகாரிகள், மலேசிய நண்பன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான், புக்கிட் அமான் வர்த்தகக் குற்றவியல் பிரிவின் போலீஸ் ஆணையர் டத்தோ ஏ.தெய்வீகன், மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஜமாருல் கான், ம.இ.கா. உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்வர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்