இந்து மதத்தை இழிவுப் படுத்தி பேசியதற்காக பெர்லிஸ் முஃப்திக்கு எதிராக நேற்று மத்திய போலீஸ் நிலையத்தில் பேரா ஹிண்ட்ராப் பொறுப்பாளர்கள் போலீஸ் புகார் செய்தனர். கடந்த மே 2 ஆம் தேதி யூடியூப் மூலமாக இந்து மதத்தை இழிவுப் படுத்தி பேசிய காணொளி வெளியானதைத் தொடர்ந்து இந்நாட்டில் மத நல் லிணக்கத்திற்கு புறம்பாக செயல்படும் இவரது செயல் குறித்து போலீசார் பாரபட்சமின்றி புலன் விசாரணை மேற்கொள்ளும் படி போலீஸ் புகார் செய்யப்பட்டது என்று பேரா ஹிண்ட்ராப் பேராளர்களுக்கு தலைமை ஏற்றுள்ள நாகேஷ் கிருஷ்ணன் கூறினார். இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் அவரது பேச்சு அமைந்துள்ளது. பெர்லிஸ் சமய அறிஞராக உள்ள அவர் இது போன்று பேசியிருப்பது வேதனை யைத் தருவதோடு இவரது இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் இதன் உள்நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் வெளிப் படையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். போலீஸ் படைத் தலைவர் இவ்விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் நாட்டில் அமைதியை நிலை நிறுத்துவதற்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்