குண்டர் கும்பல் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு நாடு தழுவிய நிலையில் குண்டர் கும்பல் தலைவர்களுக்கு எதிரான வேட்டையை போலீசார் தொடங்கியிருப்பதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் நேற்று கூறினார். குண்டர் கும்பல்கள் சம்பந்தப்பட்ட நட வடிக்கைகளுக்கு எதிராக போலீசார் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத் தியிருப்பதால் கூடிய விரைவில் பல குண்டர் கும்பல்களின் தலைவர்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார். இக்குண்டர் கும்பல்கள் பள்ளிக்கூட மாணவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் நிலைமை தற்போது கவ லைக்கிடமாக உள்ளது. இப்போதே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவறினால் பிரச்சினை மோசமடையும். ஜொகூர், கெடா, பினாங்கு ஆகிய மாநிலங் களில் மேற் கொண்ட நடவடிக்கைகளில் போலீசார் பல்வேறு குண்டர் கும்பல் தலைவர்களை கைது செய்துள்ளனர் என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்