(அலோர்ஸ்டார்) கேங் 35 குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது தொடர் பில் இங்கு சுங்கைப்பட்டாணியிலுள்ள ஓர் இடைநிலைப் பள்ளி யின் 18 மாணவர்க ளுக்கு எதிராக போலீஸ் நேற்று 4 நாள் தடுப்புக் காவல் ஆணையைப் பெற்றுள்ளது. அவ்விவகாரத்தை புல னாய்வு செய்ய ஏதுவாக போலீ ஸுக்கு கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில் சுங்கைப் பட்டாணியிலுள்ள ஒரு நீதிமன்றம் நேற்று அந்த ஆணையை வழங்கியது.ஐயத்திற்குரிய அந்த 18 பேரும் 15க்கும் 17க்கும் இடைப் பட்ட வயதுடைய மாணவர்களா வர். சம்பந்தப்பட்ட குண்டர் கும் பலுடன் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் இடை நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மூவருக்கு எதிராக போலீஸ் கடந்த வியாழன் முதல் வரும் ஞாயிறு வரையான தடுப்புக் காவல் ஆணையைப் பெற்றது.கடந்த மே 3இல் ஒரு நிகழ் வைக் கொண்டாடி கேக் வெட்டும் அக்குழுவின் படங்கள் வேகமாக வெளியானதை யடுத்து கெடா போலீஸ் அந்த 21 பேரையும் பிடித்தது. சம்பந்தப்பட்ட நிகழ்வு கேங் 35 குண்டர் கும்பல் தொடர்புடை யது எனக் கூறப்படுகிறது. அவர்களிடம் சிறப்பு நாளில் (3.5.2017) நடத்திய கொண் டாட்டத்திற்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.அவர்கள் 1966ஆம் ஆண்டு குண்டர் கும்பல் தடைச்சட்டம் பிரிவு 52இன் கீழ் புலனாய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்