தஞ்சோங் காராங் கம்போங் சுங்கை யூ இந்தியர் வீட்டுமனைத் திட்டம் பணக்காரர்களுக்கா? ஏழைகளுக்கா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். சம்பந்தப்பட்ட லாட் நிலத்திற்கு நாற்பதாயிரம் வெள்ளிக்கும் மேல் காப்புறுதி பிரிமியம் தொகை விதித்துள்ள சிலாங்கூர் அரசு அந்நிலங்களை உண்மை யிலேயே மக்களிடம் வழங்குகிறதா அல்லது விற்பனை செய்கின்றதா என்று பாலன் வேங்கு(வயது 46) கேள்வி எழுப்பினார். இத்திட்டத்தில் ஏழை இந்திய விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குவதாகக் கூறிக் கொண்டு அவர்களை மாநில அரசு ஓரங்கட்டுகிறதா? என்று வேலாயுதம் பெரியண்ணன் (வயது 56) ஆவேசப்பட்டார். மூவாயிரம் வெள்ளிக்கும் கீழ் வருமானம் பெறுபவர்கள் இவ்வளவு பெரிய தொகையை ஆறு மாதத்திற்குள் செலுத்துவது சாத்தியப்படுமா என்று இராஜேந்திரன் காத்தவராயன் (வயது 54) கேள்வி எழுப்பினார். இது உண்மையிலேயே ஏழைகளுக்கானத் திட்டமா?அல்லது பணக்காரர்களுக்கானத் திட்டமா? என்று அவர் மேலும் வினவினார். இத்திட்டத்தில் நில உறுதிக் கடிதம் வழங்கப்பட்டவர்களில் 175 பேரில் பெரும் பகுதியினர் வசதி படைத்தவர்கள் என்று புக்கிட் ரோத்தானைச் சேர்ந்த பாலன் வேங்கு குறிப்பிட்டார். இதில் ஏழை இந்தியர்களுக்கு முன்னுரிமை என்பது காதில் பூச்சுற்றும் வேலை என்றும் அவர் சொன்னார். மேலும் சம்பந்தப்பட்ட விவசாயத் திட்ட குடியேற்றவாசிகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்பட வில்லை என்றும் பிரிமியத் தொகையை உரிய காலத்திற்குள் செலுத்த முடியாமல் இந்தியர்களில் பலர் விழிப்பிதுங்கி போயுள்ளனர் என்றும் பாலன் விவரித்தார். பிரிமியம் செலுத்த முடியாத வேளை யில் அவர்கள் உறுதிக் கடிதத்தை மாவட்ட நில அலுவலகத்திடமே திரும்ப ஒப்படைக்க நேரிடலாம் என்று குறிப்பிட்ட ஜெரம் புக்கிட் செராக்கா ம.இ.கா. கிளைத் தலைவர் வேலாயுதம் பெரியண்ணன், உறுதிக் கடிதம் வழங்கப்பட்டவர்களில் 153 இந்தியர்களில் பெரும் பகுதியினர் மேற்பட்ட நடவடிக்கையில் இறங்கினால் அத்திட்டத்தில் இந்தியர்களின் அடையாளம் மறைந்து போகலாம் என்று அவர் எச்சரித்தார். நில உறுதிக் கடிதம் வழங்கப்பட்டவர்களில் 20 பேர் மலாய்க்காரர்கள் இருவர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விவசாயத் திட்ட குடியேற்ற வாசிகளுக்கு முன்னுரிமை வழங்காமல், அதிகமான பிரிமியம் விதித்து பணக்காரர்களுக்கு அல்லது வசதி படைத்தவர்களுக்கு இவ்வீட்டு மனைத் திட் டத்தை சாதகமாக்கியுள்ள சிலாங்கூர் அரசு ஏழை இந்தியர்களை ஓரங்கட்டுவதாகவே அர்த்தப் படும் என்று ஜெரம், 15 ஆவது கல்லைச் சேர்ந்த இராஜேந் திரன் காத்தவராயன், தெரிவித்தார். கடந்தாண்டு ஆகஸ்ட்டில் வழங்கப்பட்ட வீட்டு மனைக்கான உறுதிக் கடிதம் இவ்வாண்டு பிப்ரவரி மத்தியில் காலாவதியாகிவிட்டதாக தெரிய வருகிறது. தேர்வு பெற்ற 175 பேர், 50 ஆயிரம் வெள்ளிக்கும் மேல் விதிக்கப்பட்ட இத்திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை என நம்பப்படுகிறது. மேலும், அவர் களில் பெரும்பாலோர் அவ்வீட்டு மனைக்கான பிரிமியத்தை குறைக்கும் படி செய்து கொண்ட மேல் முறையீட்டையும் மாநில அரசு நிராகரித்து விட்டது. இருந்தும் 1.3.2017 ஆம் நாள் நடைபெற்ற மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அவர்களுக்கு இரண்டு வகையான பிரிமியம் விதிப்பதென முடிவு செய்யப் பட்டதாக அறிய வருகிறது. ஆனால், அந்த இரண்டாவது திட்ட வாய்ப்பும் அவர்களுக்கு பெரும் சுமையாகவே கருதப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்