பேங் நெகாரா மலேசியா (பிஎன்எம்) இன் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் நடத்தப் பட்டு வரும் மோசடிக்கு எதிராக கவன முடன் இருக்கும்படி அந்த மத்திய வங்கி பொதுமக்களை எச்சரித்திருக்கிறது. எஸ்எம்எஸ் வழி தொடர்பு கொள்ளப்படுவோர் ஓர் அகப் பக்கத்தை வலம் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுவதை யும் அங்கு அவர்களை பற்றிய தகவல் கள் கோரப்படுவதையும் தான் அறிந்தே வைத்திருப்பதாக பிஎன்எம் ஓர் அறிக்கையில் நேற்று கூறிற்று. 15888 என்ற எண்ணில் இருந்து எந்தவொரு எஸ்எம்எஸ் தகவலையும் பிஎன்எம் அனுப் பவில்லை என்பதை தெரிவித் துக் கொள்கிறோம். ‘Charges RM 0.50 BNM, Bank memberikan 3% subsidi.http://www.mybnm.net/’ என எஸ்எம்எஸ் தகவலில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இது ஒரு போலி அகப்பக்கத் துடன் தொடர்புடையது. அதில் உங்களுடைய அடையாள அட்டை, வங்கி சான்றிதழ் பற்றிய தகவல்கள் கோரப்பட்டிருக்கும். இம்மாதிரியான எஸ்எம்எஸ் தகவல்களை புறக்கணிக்கும்படி பொதுமக்களுக்கு பிஎன்எம் ஆலோசனை கூறியது. எஸ்எம்எஸ், தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் அல்லது செய்திதள கருவிகள் வழி தனிப்பட்ட தகவல் களை அல்லது விளக்கங்களை பிஎன்எம் கோரியதே இல்லை என்று அது கூறிற்று. பிஎன்எம்ஐ தொடர்புபடுத்த சந்தேகத்திற்குரிய தகவலோ, மின்னஞ்சலோ வந்தால் புகார் செய்ய அல்லது விவரம் கோர பொதுமக்கள் BNMTELELINK உடன் 1300-88-5465 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம் அல்லது bnmtelelink@bnm.gov.my என்ற மின்னஞ்சலில் பதிவு செய்யலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்