மாநகரின் மையப்பகுதிகளில் அந்நிய நாட்டினர் வர்த்தகம் புரிவதற்கு புதிய விதிமுறைகளை கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிமுகம் செய்யவிருக் கிறது. இதன் வழி, உயரிய தரம் வாய்ந்த அந்நிய நாட்டு வர்த்தகம் மட்டுமே இங்கு செயல்படுவதற்கு அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய விதிமுறைகளின் கீழ், வெ.10 லட்சம் மூலதனம் பதிவு பெற்ற அந்நிய நாட்டு வர்த்தகங்கள் மட்டுமே மாநகரில் வர்த்தகம் அமைக்க அனுமதிக் கப்படும்.ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் மட்டுமே உரிமம் புதுப்பிக்கப்படும் என்பதால் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் அனைத்து புதிய மற்றும் நடப்பு வர்த்தகங்கள் இப்புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மாநகரின் கீழ்க்காணும் பகுதிகளில் வெளிநாட்டினர் வர்த்தகம் புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்: * ஜாலான் சிலாங் / ஜாலான் துன் தான் சியூ சின் * ஜாலான் புக்கிட் பிந்தாங் * லெபோ அம்பாங் / லெபோ புசார் * ஜாலான் சௌக்கிட் / ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் * ஜாலான் மஸ்ஜித் இந்தியா * ஜாலான் கெனாங்கா * பூசாட் பண்டார் உத்தாரா, செலாயாங் ஆகியன. குறிப்பாக நேப்பாளம், வங்காளதேசம், மியன்மார் மற்றும் இதர வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே இப்பகுதிகளில் பெருமளவு வர்த்தகத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தங்கள் நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கென்றே பிரத்தியேகமாக இந்த வர்த்தகங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. குறிப்பிட்ட இந்த பகுதிகள் மட்டும் என்றில்லாமல் அவ்வப் போது பட்டியல் மேம்படுத்தப் படும் என்று மாநகர் மன்றத்தின் நிறுவன திட்டப்பிரிவு இயக் குநர் காலிட் ஜக்காரியா தெரிவித்துள் ளார் என தி மலாய் மெயில் நாளேடு தகவல் வெளியிட்டுள் ளது. மாநகரில் வர்த்தகத்தில் ஈடுபடும் அந்நிய நாட் டினரை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும், தலைநகரில் சில்லறை வாணிபம் மற்றும் வர்த்தகத் துறைகளில் அவர் களின் ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இது அவசியமாகிறது என்று அவர் சொன்னார். அந்நிய வர்த்தகர்களின் வருகை உள்நாட்டு வணிகர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மாநகரின் தோற்றத்தையும் அது பாதித்துள்ளது என்று காலிட் கருத்துரைத்தார். எனினும், இந்நாட்டில் வர்த்தகம் புரிய விரும்பும் வெளிநாட்டினருக்கு தடை விதிப்பது இதன் நோக்கமல்ல. சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனுமதியும் அங் கீகாரமும், எங்கள் அனுமதியும் இருக்கும் வரையில் அவர்கள் இங்கு வர்த்தகம் புரியலாம். கீழ்க்கண்ட பிரிவுகளின் அனுமதியை அவர்கள் பெற்றிருப்பது அவசியமாகும்: * தேசிய வங்கி (பேங்க் நெகாரா) * அனைத்துலக வர்த்தகத் தொழில்துறை அமைச்சு (மிட்டி) * உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு * மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் * மிட்டி, கூட்டரசுப் பிரதேச அமைச்சு, செயலாக்க நிர்வாகப் பிரிவு ஆகியன ஒன்றிணைந்த இன்வெஸ்ட் கே.எல். எனும் முதலீட்டு நிறுவனம் ஆகிய வற்றின் அனுமதியை வெளிநாட்டினர் முதலில் பெற்றிருக்க வேண்டும். இந்த வர்த்தக அமைப்புகளின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் 50 விழுக்காட்டினருக்கும் மேல் மலேசியர்களை வேலைக்கமர்த்துவதும் கட்டா யமாகும் என்று மாநகர் மன்றம் கூறுகிறது. வெளிநாட்டினர் ஈடுபடக்கூடாத தொழில்களையும் மாநகர் மன்றம் பட்டியலிட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்கள், நகைக்கடைகள், வாகன பட்டறைகள், தொலைத் தொடர்பு (முன்பணம் செலுத்தப்பட்ட அட்டைகள் - prepaid cards, தொலைபேசி பாகங்கள் விற்பனை), கணினி, தளவாடங்கள், மூலிகை பொருட்கள், ஜவுளிகள் ஆகியன அவற்றுள் அடங்கும். எனினும், அனைத்துலக, பிரத்தியேக முத்திரைகளில் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இதில் விதிவிலக்களிக்கப்படும். அதிகமான உள்நாட்டு வணிகர்கள் தங்கள் வர்த்தக உரிமங்களை வெளிநாட்டினரிடம் அடகு வைத்திருப்பதாலும் இவ்விதிமுறைகள் அவசியமாகின்றன என்று மாநகர் மன்ற வட்டார மொன்று சுட்டிக்காட்டியது. உள்நாட்டினரின் வர்த்தகங்களை இன்று அந்நியர்கள் நடத்தி வருகின்றனர். நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளதால் மாநகர் மன்றம் இதுபோன்ற கடுமையான நடவடிக்கையை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இம் மாதிரியான நடவடிக்கைகளுக்கு இதன் வழி முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று நம்புகிறோம். அதே சமயம், உள்நாட்டு வர்த்தகங்கள் இதன் வழி மேம்படவும் முடியும் என்று அவ்வட்டாரம் குறிப்பிட்டது. அந்நிய நாட்டினர் மாமாக் கடைகளை நடத்துவதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். மளிகைக் கடைகளை நடத்துவதற்கும் நடைபாதைகளில் காய்கறி கள் விற்பதற்கும் அவர்கள் இனியும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேண்டுமானால், மாநகரில் பேரங்காடிகளை அவர்கள் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், உள்நாட்டினருக்கு உரிமையான வர்த்தகங்களை நடத்த அவர்கள் இனியும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவ்வட்டாரம் மேலும் கூறியது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்