சயாமிய மரண ரயில்வேயில் மலாயாவைச் சேர்ந்த தமிழர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மடிந்து உள்ளனர் என்று ஆய்வாளர் சந்திரசேகர் பொன் னுசாமி கூறுகிறார். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு மலாயாவில் காங்கிரஸ் சார்பில் மருத்துவக் குழுவில் இடம் பெற்று இருந்த டாக்டர் சி. சிவராமா சாஸ்த்ரி 1946 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி எழுதிய ஒரு கடிதத்தின் வழி இது தெரியவந்துள் ளதாக சந்திரசேகரன் பொன்னுசாமி குறிப்பிடுகிறார். ஜப்பானியர்களால் வலுக்கட்டாயமாக மலாயாவிலிருந்து சயாம் - பர்மா ரயில் இருப்புப்பாதை அமைப்பதற்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் நிறைய பேர், தாயகம் திரும்ப முடியாமல், தங்கள் குடும்பங்களை பார்க்காமலேயே பசி பட்டினியால், மலேரியா நோயினால், அடித்து துன்புறுத்தியதால் மரணம் அடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சிலர் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆசியாவிலிருந்து கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் சயாம் - பர்மா இருப்புப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர்களின் பெரும் பகுதியினர் தமிழர்களாக இருந்துள்ளனர். தாய்லாந்து, பர்மா, ஜாவா,சீனா, மலாயா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த பின்னர் சயாம் மரணப்பாதை அமைக்க சென்றவர்களின் நிலை குறித்து யாரும் ஒரு பொருட்டாக கருதாததுதான் இங்கு சோகம் என்கிறார் சந்திரசேகரன். ஆனால், இவர்களை சயாமிலிருந்து மீட்பதற்கு பிரிட்டிஷார் சிறப்பு ரயில் ஒன்றை அனுப்பியதாக குறிப்புகள் காட்டுகின்றன. பலர் மடிந்து விட்ட நிலையில் குலையும் குற்றுயிருமாக இருந்த சிலர், எப்படியோ தப்பி தாயகம் திரும்பியுள்ளனர். தங்கள் உயிரை நீத்தவர்களுக்காக ஒரு ஞாபகார்த்த கல்லறையோ அல்லது ஒரு நினைவுச்சின்னமோ இதுவரை எழுப்பப்படவில்லை. அவர்கள் அங்கீ கரிக்கப்படாமலேயே போனார்கள். தாய்லாந்தில் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வரும் சயாமிய மரண ரயில்பாதை ஒன்று சுற்றுப்பயணிகளை கவர்வ தற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த பயங்கரத்திலிருந்து தப்பியவர்களுக்கு தற்போது 100 வயதுக்கும் மேல் இருக்கும். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மலேசியாவில் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள். சிலாங்கூர் மாநிலத்தில் கோலசிலாங்கூர், ஜெராம் என்ற இடத்தில் எல்லையன் கண்ணையா என்பவர் இன்னமும் உயிரோடு இருக்கிறார். பசி பட்டினியால் அவதியுற்றதாகக் கூறும் அவர், தனது தோட்டத்திற்கு சொந்தமாக திரும்பியதாக குறிப்பிடுகிறார். இதன் தொடர்பில் சயாம் மரண ரயில்வேயில் உயிரிழந்தவர்கள் நினைகூரப்படுவதற்கும் அவர்களின் தியாகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஞாபகர்த்த நினைவுத்தூண் எழுப்பப்படுவது அவசியமாகிறது என்கிறார் சந்திரசேகரன். இதற்கான முயற்சிகள் கடந்த 1960 மற்றும் 1970 களில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகள் யாவும் தோல்வி அடைந்தன என்று மரண ரயில்வே தன்னார்வ குழுவின் தலைவருமான சந்திரசேகரன் குறிப்பிடுகிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்