(புத்ராஜெயா) மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் நாடற்ற ஆவணப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியாக சிறப்பு செயல்முறை திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தேசிய பதிவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் யாசிட் பின் ரம்லி அறிவித்துள்ளார். அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்த இந்தியர்களுக்கான நீல வியூகப் பெருந்திட்டத்தின் அடிப்படையில் அந்த சிறப்பு செயல்முறை திட்டம் விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார். 1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக பிறந்த இந்தியர்கள், எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லாமல் நாடற்றவர்கள் என்ற அந்தஸ்தில் இருந்து வருவது தொடர்பில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். நேற்று இங்கு புத்ராஜெயாவில் உள்ள தேசிய பதிவு இலாகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் அவர் இதனை தெரி வித் தார். பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை, சட்டப்பூர்வ குடியுரிமை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கொண்டிருக்காத இந்தியர்களின் பிரச்சினைக் குத் தீர்வு காணும் முயற்சியாகவே இது அமையும் என்றார். எனினும் நாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடற்றவர்களாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் வன்மையாக மறுத்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியர்களிடமிருந்து தேசிய பதிவு இலாகாவிற்கு கிடைக்கப்பெற்ற அடையாள ஆவணம் தொடர்பான விண்ணப்பங்கள் மொத்தம் 6,527 ஆகும். இதில் முறையாக இருந்தது 4547 ஆகும். அங்கீகரிக்கப்பட்டது 4177 விண்ணப்பங்கள் ஆகும். அதேபோன்று கடந்த 2013 ஆம் ஆண்டு 2,500 விண்ணப்பங்களை நாடற்ற அந்தஸ்தில் உள்ள இந்தியர்களிடமிருந்து தேசிய பதிவு இலாகா பெற்றது. இதில் 137 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியர்களின் ஆவணப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக தேசிய பதிவு இலாகாவின் கதவுகள் திறக்கப்பட்ட வண்ணமே உள்ளன. விண்ணப்பம் செய்து அங்கீகரிக்கப்பட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் 600 பேர் மட்டுமே தங்கள் ஆவணங்களை தேசிய பதிவு இலாகா விடமிருந்து இன்னும் கோராமல் இருக்கின்றனர் என்று அவர் சொன்னார். நாடற்ற அந்தஸ்தில் உள்ளவர்கள் தங்களின் உண்மையான விவரங்கள், அதற்கு சான்றாக சில ஆதாரப்பத்திரங்களைக் கொண்டு இருந்திருந்தால் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை அங்கீகரிப்பதில் தேசிய பதிவு இலாகாவிற்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் 1957 க்கு முன்னால் பிறந்தவர்களுக்கு தேசிய மொழி சோதனையில் கடுமையான முறை கையாளப்படுவதாக கூறப்படுவதை அவர் மறுத்தார். அந்த சோதனையை தாங்கள் எளிதாக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியர்கள் தொடர்பான ஆவணப்பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக தேசிய பதிவு இலாகா அலுவலகங்களில் தமிழ் பேசும் அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் வலியுறுத்திய கோரிக்கையை தாம் கவனத்தில் கொள்வதாக அவர் சொன்னார். மேலும் தேசிய பதிவு இலாகாவின் சேவை அளிப்பு முறையை மேம்படுத்துவதற்கு அவர் உறுதி அளித்தார். பெற்றோர்களில் தாயார் இந்நாட்டுப் பிரஜை யாக இருப்பாரேயானால் அவர்களின் பிள்ளைகளுக்கு ஆவணம் கிடைப்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை. இங்கு தந்தையின் குடியுரிமை அந் தஸ்து முக்கியமல்ல. மாறாக தாயாரின் குடியுரிமை அந்தஸ்துதான் மிக முக்கியம். அதனைதான் அரசமைப்பு சட்டமும் வலியுறுத்துவதாக மற்றொரு உயர் அதிகாரி தெரிவித்தார். ஆதரவற்ற இல்லங்களில் தக்க அடையாள ஆவணங்கள் இல்லாமல் பரிதவிக்கும் நிலையையும் இந்த சந்திப்புக்கூட்டத்தில் பார் வைக்கு கொண்டுவரப்பட்டது. தமது இலாகாவை சேர்ந்த அதிகாரிகளும் அவ்வப்போது களத்தில் இறங்கி பரிகாரம் கண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்